தீபாவளிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் !

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் 9ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Day - Time Unreserved Special Trains between Chennai egmore - Tirunelveli
நாளை காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 11.15 நெல்லை வந்தடையும் என்று தெரிவித் துள்ளது.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் இடம் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர்.

பலரும் பகல் நேர ரயிலில் செல்ல தயாராகி வருகின்றனர்.  தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடைசி நேரத்தில் புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து

நெல்லைக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில் சனி மற்றும் திங்கட்கிழமை நவம்பர் 7, 9 ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

முன்பதிவில்லாத 9 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும். 

இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்கத்தில் நெல்லையில் இருந்து நவம்பர் 8 மற்றும் 11ம் தேதிகளில் காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,

கொடைக்கானல் ரோடு, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings