சொந்தமாக டிவி, பிரிட்ஜ், ஏசி, கார் எதுவும் வைத்துக் கொள்ள வில்லை. வானொலி கேட்பார் மற்றும் செய்தித்தாள் படிப்பார்.
50 ஆண்டுகள் பொது வாழ்வில் வாழ்ந்த ஒரு மனிதரின் மறுபக்கம் தான் இவை. அவர் ஏழ்மையில் வாழவில்லை, ஆடம்பரத்திலும் திளைக்க வில்லை, குறைந்த பட்சம் என்ன இருந்தால் போதுமோ அப்படி வாழ்ந்தார்.
தன் ஓய்வூதியம் மற்றும் தான் எழுதிய நூல் ராயல்ட்யிலும் ஜீவனம் நடத்தினார்.
புத்தகம் என்ற பெயரில் வேறு எதாவது பொருட்கள் பரிசாக வரும் பட்சத்தில் அதை பதிவு செய்து அரசாங்க கருவூலத்திற்கு அனுப்பி விடுவார்.
அப்துல் கலாம் விட்டுச் சென்ற உடைமைகள் பட்டியலிடப் பட்டுள்ளது.
புத்தகங்கள் -2500
கை கடிகாரம் -1
முழுகை சட்டை -6
கால் சட்டை -4
சூட் - 3
ஷூ - 1 ஜோடி
தன்னுடைய சேமிப்பிலிருந்து நிறைய தான தர்மங்களும், தேர்ந்தெடுத்த அறக் கட்டளைக ளுக்கு கொடையளித்தார்.
பதவியில் இருந்தபோது பெற்ற வருமானத்தில் பாதியும், பிறகு ஒய்வூதியத் திலும் ஒரு பாதி, தன் அண்ணன் குடும்பத்திற்கு அனுப்பி கொண்டிருந்தார்.
அடுத்த ஆண்டு தன் மூத்த அண்ணனின் 100வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று விரும்பியவர்.
கர்மவீரரை மிஞ்சும் ஒருவரை நாம் கண்டுள்ளோம், அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்ளலாம். காலங்கள் முழுவதும் நம்முடைய நினைவிலும் பதிந்து விடுவார்... எஸ்.சந்திரசேகர்