ஜப்பான் நிறுவனம் தயாரித்த செயற்கை மனைவி !

இயற்கையை தோற்கடிக்கும் வண்ணம் அனைத்தையும் செயற்கையாக செய்து வரும் விஞ்ஞான உலகம் தற்போது மனைவியையும் செயற்கையாக செய்ய ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனம் செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.


ஜப்பானில் செக்ஸ் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வரும் Orient Industry என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய ஸ்கின் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது.

உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல்பகுதிகளும் இருப்பதால் இதை பார்ப்பவர்கள் பெண் என்றே நம்பத் தொடங்கிவிடுவார்கள். £1,000 விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு டிசைன்களில் உயரங்களில் வடிவங்களில் கிடைக்கின்றது.

 இந்த பொம்மையை செக்ஸ் உறவிற்கும் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது.

ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் Orient Industry தெரிவித்துள்ளது.

நீங்கள் இனிமேல் செக்ஸ் உறவிற்கு மனைவியை அல்லது வேறு பெண்களையோ தேடவேண்டியதில்லை. இந்த செக்ஸ் பொம்மைகள் போதும் என அந்த நிறுவனம் பிரபல ஜப்பானிய ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது.
Tags:
Privacy and cookie settings