தீபாவளி பண்டிகை என்றதும் சட்டென ஒரு குதூகலம் தொற்றிக்கொள்ளுமே.. இதற்கு முதல் காரணம் பட்டாசுதான். புது ஆடை, இனிப்புகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு பிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்
உலகம் முழுவதும். வண்ணங்களால் வாண வேடிக்கை காட்டும் மிதவாத பட்டாசுகள், டமார் டமார் என சத்தங்களால் அதிர வைக்கும் தீவிர பட்டாசுகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரகம் பிடிக்கும்.
சுற்றுச்சூழல் மாசு, பாதுகாப்பு குறைகள் என பல பாதக அம்சங்கள் இருந்தாலும், இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாகவே உலக அளவில் பட்டாசுகள் புழக்கத்தில் உள்ளன.
உலக அளவில் கின்னஸ் சாதனையான பட்டாசு வாண வேடிக்கை நிகழ்ச்சி 2014 அக்டோபரில் ஜப்பானில் நடந்தது. 464 கிலோ வாணங்கள் கொளுத்தப்பட்டன. ஜப்பான் நாட்டின் ஆல்ஸ்ப் பயர்வொர்க் என்கிற நிறுவனம் இதை தயாரித்திருந்தது.
கெளநோசு (Kounosu) நகர வர்த்தக சபை இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தியது. 2014 ல் துபாய் பாம் ஜுமேரியா தீவில் நடத்தப்பட்ட வாண வேடிக்கையும் கின்னல் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
ஆண்டு வர்த்தகம்
6,000 கோடி ரூபாய்
தீபாவளி சமயத்தில் மட்டும் பட்டாசு வர்த்தகம் தோராயமாக
3,000 கோடி ரூபாய்
ஆண்டு வளர்ச்சி - 10 %
# 2012 நவம்பர் 10 ஆம் தேதி குவைத் தனது அரசியல் அமைப்பின் பொன்விழா ஆண்டை கொண்டாடியது. இதற்காக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசு வெடித்து கொண்டாடியது. இதற்கு செலவழிக்கபட்ட தொகை சுமார் 1 கோடி பவுண்டுகள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி.
# அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள பூம்லேண்ட் பயர்வொர்க்ஸ்தான் உலகின் மிகப் பெரிய நிறுவனம். 60,000 சதுர அடியில் விற்பனையகம் வைத்திருக்கிறார்கள்.
# பல நாடுகளிலும் பட்டாசு வெடிப்பதற்கு என்றே பட்டாசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தின் பிளாக்பூல் நகரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் போட்டிக்கு இப்போதே சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். இதில் உலகின் முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
# இந்தியாவில் பட்டாசு தொழிலின் தாயகம் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசிதான். 90% இங்கு உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வர்த்தகம் நடக்கிறது.
மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்த தொழிலில் 7 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சிவகாசியில் 1940-ல்தான் முறைப்படுத்தப்பட்ட தீப்ெபட்டி தொழில் ஆரம்பிக்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு 3 நிறுவனங்களே இருந்தன.
# முதன் முதலில் பட்டாசை தயாரித்த நாடு சீனா. 7ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகியுள்ளது. சீனாவின் லியூ யாங் (Liuyang) நகரமே உலக பட்டாசு தலைநகரம். இங்கு 1,000-த்துக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
இப்போதும் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் உலக அளவில் சீனாதான் முதலிடம். சீனர்கள் தங்களது புத்தாண்டை கொண்டாட தொடங்கிய பழக்கம், பிற விழாக்கள் நிகழ்ச்சிகள் என தொடங்கி இன்று உலகம் முழுக்க பரவி விட்டது.
# இந்தியாவில் தீபாவளி பண்டிகை போல பிற நாடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் பட்டாசுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
2-வது இடத்தில் இந்தியா
1-வது இடத்தில் சீனா
டாப் 10 உலக பட்டாசு திருவிழாக்கள்
ஆகஸ்ட் 09 - சிங்கப்பூர் சுதந்திர தினம் - சிங்கப்பூர்
ஜனவரி 26 - ஆஸ்திரேலிய தினம் - சிட்னி
ஏப்ரல் 4வது வாரம் - சர்வதேச பட்டாசு கொண்டாட்டம் - மாலத்தீவு
ஜூலை 4வது வாரம் - சர்வதேச பட்டாசு கொண்டாட்டம் - தெற்கு டொகாடா (யுஎஸ்)
டிசம்பர் 31 - புத்தாண்டு கொண்டாட்டம் - துபாய்
ஜனவரி 01 - ரிவிலியன் பட்டாசு திருவிழா - பிரேசில்
நவம்பர் 05 - கை பவ்கிஸ் - இங்கிலாந்து
அக்டோபர் / நவம்பர் - தீபாவளி - இந்தியா
ஜூலை 04 - அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - வாஷிங்டன்
ஜனவரி 01 - புத்தாண்டு கொண்டாட்டம் - சான்பிரான்சிஸ்கோ