உத்தர பிரதேசத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட இளம் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முயற்சித்து அது செயல்படாத நிலையில் தரையில் விழுந்து பலியானார்.
உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சவா விமான படை நிலையத்தில் வீரர்களுக்கு விமான பயிற்சி அளிக்கப்படும். இந்நிலையில் கர்மா ஸ்விங் என்ற 24 வயது வீரர் இந்திய விமான படையை சேர்ந்த விமானம் ஒன்றில் இங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பயிற்சியின் ஒரு பகுதியாக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதிக்க வேண்டும். அதன்படி அவர் கீழே குதித்து பாராசூட்டை திறக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அது திறக்கவில்லை. இதனால் அவர் பறக்க முடியாமல் தரையில் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சர்சவா விமான படையின் அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.