அச்சுறுத்தும் தெரு நாய்களை கொல்வதில் தவறில்லை.. உச்ச நீதிமன்றம் !

பொது மக்களுக்கு அச்சுறுத்த லாக விளங்குகின்ற தெரு நாய்களை கொல்வதில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
SC orders local bodies to take steps for control of stray dogs


கேரளாவில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை திருவனந்தபுரம் மாநகராட்சி பிடித்து கொன்றது.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் தெரு நாய்களை பிடித்து கொல்ல அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. 

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு உட்பட்டு நாய்களை கொல்லலாம் என தீர்ப்பு அளித்தது. 

இதற்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கில் விலங்குகள் நலவாரியமும் தங்களை இணைத்து கொண்டன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. 

அதில், நாய்களின் வாழ்நாளை விட மனித உயிர்களே மேலானது.

விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு விதிகளின் கீழ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள 

தெரு நாய்கள், ரேபிஸ் போன்ற நோய் வாய்ப்பட்ட நாய்களை கொல்ல தடை இல்லை என தீர்ப்பு அளித்தனர்.


மேலும் அனைத்து உயர் நீதி மன்றங்களும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து 

எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் தங்கள் உத்தரவில் கேட்டுக் கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings