பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல் !

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு 25 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.  
இதற்கு முன்பாக கடந்த 16-ந்தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு 36 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது. அதேபோல், அக்டோபர் மாதம் முதல் 3 முறை டீசலின் விலை 87 காசுகள் உயர்த்தப்பட்டிருந்தது.

இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே வரும் மாதங்களில் பெட்ரோல், டீசலின் விலையில் ஏற்ற, இறக்கம் இருக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings