கண்களை கட்டிய முஸ்லீம் இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் நின்று கொண்டு, “என்னை கடந்து செல்பவர்கள் என்னை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய சமூக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மாசிம் மில்லா என்ற அந்த இளைஞர், மும்பையின் சவுபாட்டி பகுதியில் தனது கைகளை விரித்தபடி, கண்களை கட்டிய நிலையில் ஒரு அட்டையுடன் நின்று கொண்டு இருந்தார்.
அந்த அட்டையில், “நான் ஒரு முஸ்லீம். நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை நம்புகிறீர்கள் என்றால் என்னை நீங்கள் கட்டிப்பிடிப்பதே அதற்கு போதுமானது” என எழுதி வைத்து இருந்தார்.
இதை பார்த்து முதலில் கூட்டம் கூடியது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு முதலில் தயக்கம் இருந்தது. சிறிது நேரத்தில் வந்த ஒருவர், முன்னால் வந்து மில்லாவை கட்டி அணைத்தார்.

வீடியோவை இங்கே பார்க்கவும்!அதைத் தொடர்ந்து அனைவரும் முன்வந்து, மில்லாவை கட்டி அணைத்து கை குலுக்கினர். சமூக விழிப்புணர்வுக்காக யுடியூப் சேனலால் இது நடத்தப்பட்டது.