ராமேஸ்வரம் மண்ணில் பிறந்தவரான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மீனவர்கள் பிரச்னைக்கு ஒரு சிறப்பான யோசனை அளித்திருக்கிறார்.
ஆழ்கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாரத்தில் 3 நாட்கள் இந்திய மீனவர்களும், 3 நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து கொள்ளலாம்.
ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் இரு தரப்புக்கும் ஓய்வு அளிக்கலாம் அல்லது அந்த நாளில் இருநாட்டு மீனவர்களும் எல்லைதாண்டி எங்கு வேண்டுமா னாலும் மீன் பிடிக்க அனுமதிக்கலாம் என்பதே அந்த யோசனை. இதை இந்திய மீனவர்கள் வரவேற்கின்றனர்.
இதை ஏன் மத்திய அரசு பரிசீலிக்கத் தவறியது என தெரியவில்லை.
இந்த விஷயத்தில் இலங்கை மீனவர்களின் நிலையையும் அறிந்து கலாம் யோசனையை செயல்படுத்தினால் பாக்.ஜலசந்தியில் மீனவர்கள் கூக்குரல் எழாது. அலைகள் சத்தம் மட்டுமே இருக்கும்.