பரந்து விரிந்த கடலில் எண்ணற்ற அதிசயங் களும் ஆச்சரியங் களும் புதை ந்து கிடக்கின்றன.
அவற்றில் ஒரு துளியாக திமிங்கலத்தின் எச்சம் பல லட்சமாக மாறும் வாசனை பொருளாக அறியப்படும் அம்பரும் ஒன்று.
இதை ஆங்கிலத்தில் ‘அம்பர்கிரிஸ் ‘என அழைக்கின்றனர்.
பார்ப்பதற்கு அ ருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழு ம் வாசனை வெளிவரும்.
பல வடிவங்களில் காணப்படும் இந்த அம்பரானது பஹாமாஸ் தீவு கடல் பகுதிகளில் அதிகளவு காணப் படுகிறது.
ஜப்பான், இந்தியா, மாலாதீவுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதிகளி லும் கிடைத்துள்ளது‘அம்பர்’ எனும் திரவம்,
வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டு க்கு உபயோகப் படுத்தப்படுவ தால் , கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலை போகிறது.
வாசனை பொருட்களில் பல ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அ ம்பர் எனும் விலை
உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் கு றித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள்.
ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்தி லிருந்து உற்பத்தி யாகிறது எ ன்பதுதான் பெரும் பாலானோரின் கருத்து.
ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீ னையே விரும்பி உட்கொள்கிறது.
கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும் போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும்.
இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக் கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வ கை திரவம் வெளியேறு கிறது.
இதுவே திமிங்கலத் தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம் பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும் போது,
படிப்படியாக உரு ண்டை வடிவம் பெற்று, கடற்கரை யில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள் ளை நிறமாக காணப்படும்.
அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.
5 கிராமி லிருந்து 50 கிலோவுக்கும் மேல் கிடைக்ககூடிய இதை அடையா ளம் காண்பது சிரமம்.
பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ள வர்களால் மட்டுமே காண முடியும். இது தண்ணீரில் கரையாது.
ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திர வியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி,
விலை உயர்ந்த வாசனைக்கு ம், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொரு ளாகவும் பயன்படுகிறது.
அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்ட பின் வி லை நிர்ணயிக்கப் படுகிறது.
கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடு வார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை,
துணியில் தடவி னால், பல நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக் கும். என்கிறா ர்கள்.
திமிங்கல த்துக்கு எச்சம் தான் ஆனால் வேண்டிய வர்களுக்கு கிடைத்தால் லட்சம்.