தனுஷ் வளர்ந்து கொண்டிருந்தபோது அவருடன் டூயட் பாட முன்னணி நடிகைகளுக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் ஆடுகளம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகரானபோது கவனிக்கப்படும் நடிகரானார்.
அதோடு, தென்னிந்திய சினிமாவை கடந்து இந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருவதால், இப்போது மேல்தட்டு நடிகைகளுக்கு அவருடன் ஜோடி சேரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தனுஷுடன் சில வருடங்களுக்கு முன்பே நடிக்க கமிட்டாகி பின்னர் கால்சீட் பிரச்னையால் அந்த படத்தில் இருந்து பின்வாங்கிய காஜல்அகர்வால், சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாரி படத்தில் தனுசுடன் நடித்தார்.
அவருக்குப்பிறகு சமந்தா, எமி ஜாக்சன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தனுஷ் படங்களில் நடித்துள்ள நிலையில், எதிர்நீச்சல் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்தில் அஜித்தின் மச்சினி ஷாம்லி ஒரு ஹீரோயினாக ஏற்கனவே கமிட்டாகி விட்டார்.
இந்த நிலையில், அப்படத்தில் நெகட்டீவான ரோலில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேசியுள்ளனராம்.
தூங்காவனம் படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த த்ரிஷா, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகமடைந்திருக்கிறாராம். ஆக, இப்போதுதான் தனுஷுடன் முதன்முறையாக த்ரிஷா ஜோடி சேருகிறார் என்று கூறப்படுகிறது.