உதட்டுப் பிளவுடன் பிறந்த குழந்தையொன்றைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சீனாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறந்து இரண்டே நாட்களான குழந்தைக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஊசியை ஏற்றினார் என அக்குழந்தையின் தாத்தா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊசிக்கான பொட்டாசியம் க்ளோரைட் இரசாயனத்தை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரவலான பிறப்புக்குறைபாடான உதட்டுப் பிளவு, சுலபமாக சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சினை என்பது குறிப்பிடத்தக்கது.