ஷாருக்கான் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாஜக... சிவசேனா கட்சி !

நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டதாக கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தான் செல்லும்படி விமர் சித்த பாஜகவுக்கு, சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷாருக்கான் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாஜக... சிவசேனா கட்சி !
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக, நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இது பற்றி ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்த பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா, ‘‘ஷாருக்கான் இந்தியாவில் இருந்தாலும், அவரது ஆன்மா பாகிஸ்தானில் தான் நிலை கொண்டுள்ளது’’ என்றார். 

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான விமர்சித்த பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா தன் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் எழுதியுள்ள தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது: 

மகாராஷ்டிர முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், பாகிஸ்தானின் கஜல் பாடகர் குலாம் அலிக்கு அழைப்பு விடுக்கிறார். 

மற்றொரு புறம் சகிப் புத்தன்மை குறித்து கருத்து தெரி வித்த நடிகர் ஷாருக்கான் பாகிஸ் தானுக்கு செல்லும்படி பாஜக தலைவர்கள் விமர்சித்ததற்கு மவுனம் சாதிக்கிறார். 
பாகிஸ்தான் விவகாரத்தில் பாஜகவினர் ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? 

ஷாருக்கான் ஒரு நடிகர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை தாக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:
Privacy and cookie settings