ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்... மனு தள்ளுபடி

பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி
பிரிட்டன் குடிமகன் என்று தன்னை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு அண்மையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்திய அரசியல் சாசன விதிமுறைகளின் படி ஒருவர் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ள முடியாது என்றும் பிரிட்டனில் இது அனுமதிக்கப்படுவதாகும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார். 

இரட்டை குடியுரிமை விவகாரத்தில்  சிபிஐ வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   

இந்த மனுவை இன்று விசாரித்த  உச்ச நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குடியுரிமை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings