பஞ்சர் கடை உரிமையாளரை மிரள வைத்த மின்வாரியம் !

ஹரியாணாவில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் பஞ்சர் கடை உரிமையாளருக்கு ரூ.77 கோடிக்கு மின் கட்டணம் செலுத்தும்படி, ரசீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அம்மாநிலத்தின் அனைத்து மின் நுகர்வோரையும் மின்சாரம் தாக்கியது போல அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
டெல்லியை அடுத்த பரிதாபாத் நகரில் சுரீந்தர் ஆட்டோ வொர்க்ஸ் என்ற பெயரில், சிறிய பஞ்சர் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை மூலம் வரும் வருமானத்தைக் கொண்டுதான், அதன் உரிமையாளர் தன் வீட்டுச் செலவுகளை மட்டுமின்றி, கடைக்கான வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றை சமாளித்து வருகிறார். 

இந்நிலையில் ஹரியாணா மின்வாரியத்திடம் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதியிட்ட, மின்கட்டண ரசீது பஞ்சர் கடை உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மின் கட்டணம் குறைந்திருக்கிறதா என்ற ஆவலில் அந்த ரசீதை பிரித்து பார்த்தவர், அப்படியே உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போல பதறி போனார். காரணம் அந்த மாத மின் பயன்பாடாக ரூ.77.89 கோடி செலுத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது தான். 

இதற்குள் அடுத்த இடியாக, மின் கட்டண தகவலை கேட்ட பஞ்சர் கடை உரிமையாளரின் தாயாரும் அப்படியே மூர்ச்சை அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனால், பஞ்சர் கடை உரிமையாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இது குறித்து அவர் கூறும் போது, ‘‘வாடகை எடுத்து தான் இந்த பஞ்சர் கடையை நடத்தி வருகிறேன். 

வழக்கமாக, எனக்கான மின் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல், ரூ. 2,500க்குள் தான் வரும். இத்தனைக்கும் என் கடையில் ஒரு பல்பும், ஒரு மின்வசிறியும் தான் பயன்படுத்தி வருகிறேன். தவிர இதற்கு முன் செலுத்த வேண்டிய அனைத்து மின் கட்டணங்களையும் நிலுவை வைக்காமல் செலுத்தி விட்டேன். 

அப்படி இருந்தும், ரூ.77 கோடிக்கு மின் கட்டணம் வந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’’ என்றார். ஹரியாணா மாநிலத்தில் மிகப் பெரிய தொகையாக மின் கட்டணம் செலுத்தும்படி மின் நுகர்வோருக்கு ரசீது வருவது முதல் முறையல்ல. 

ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோனிபட் மாவட்டத்தில் வெற்றிலை பாக்கு கடை நடத்தி வருபவருக்கு ரூ.132 கோடிக்கும், கடந்த 2007-ம் ஆண்டு, ஹரியா ணாவின் நார்நவுல் நகரில் வசித்து வரும் நுகர்வோர் ஒருவருக்கு ரூ.234 கோடிக்கும் மின் கட்ட ணம் செலுத்தும்படி ரசீது அனுப் பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த வசூல் முறையால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்து வரும் அதே வேளையில், தொழில் நுட்ப கோளாறு காரணமா கவே தவறுகள் நடப்பதாக, மிகுந்த சாவகாசமாக மின்வாரிய அதிகாரிகள் பதில் அளிக்கி்ன்றனர்.
Tags:
Privacy and cookie settings