உணவின் மூலம் பரவும் "லிஸ்டிரியா" என்ற ஒரு நுண்கிருமி பல நாட்களாக குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள சமைத்த உணவில் வளரத் துவங்கும்.
அந்த உணவை உண்ணுப வர்களின் குடல் பாதைக்குள் நுழைந்து "லிஸ்டிரி யோசிஸ்" என்ற நோயை உருவாக்கும்.
இதனால் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கு போன்ற பல அறிகுறிகள் மட்டு மல்லாது சிறிது நாட்களில் குடலை பாழாக்கியதொடு நிறுத்தாமல் இரத்ததின் மூலமாக அருகிலுள்ள உறுப்புகளையும் தாக்கத் துவங்கும்.
இந்தக் கிருமியினால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகள், வயதான வர்கள், கர்ப்பம் தரித்த பெண்கள்.
லிஸ்டிரியா வளர்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:
1. குளிர் சாதனப் பெட்டியில் வைத்த சமைத்த உணவை இரண்டு நாட்களுக்குள் உபயோகப் படுத்தி விட வேண்டும். உபயோகப் படுத்துவதற்கு முன் உணவை சூடாக்குவது மிக அவசியம்.
2. குளிர்சாதனப் பெட்டிக்குள் உள்ள வெப்பநிலை எப்போதும் 4°C கீழே இருத்தல் மிக முக்கியம். உறை விப்பான் அடுக்கில் இருக்கும் வெப்பநிலை -18°C இருத்தல் வேண்டும். ஏனெனில் அந்த வெப்ப நிலையில் லிஸ்டிரியாவி னால் வளர முடியாது.
3. வாரத்துக்கு ஒரு முறை குளிர்சாதனப் பெட்டியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சிந்திய உணவுப் பொருட்களை உடனே அகற்றி துடைத்து விடுவதன் மூலம் கிருமி அதில் வளர்ந்து மற்ற உணவுகளில் பரவுவதை தடுக்கலாம். முடிந்த வரை..
அன்று சமைத்த உணவை அன்றே முடித்து விடுங்கள்.. வியாதிகளை நாமே மாலை போட்டு வரவேற்க வேண்டாமே..