இந்தியாவின் முதல் சோலார் விமான நிலையமாக கொச்சி !

இந்தியாவி லேயே சோலார் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெயரை கொச்சி சர்வதேச விமான நிலையம் பெற வுள்ளது.
இந்தியாவின் முதல் சோலார் விமான நிலையமாக கொச்சி !
12 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் நிலை யத்தை வரும் 18ஆம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டி திறந்து வைக் கவுள்ளார். 

கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நாள் ஒன்றிற்கு 50,000 முதல் 60,000 யூனிட் மின்சாரம் தேவைப்ப டுகிறது. 

இந்த மின்சாரத் தேவை ஓரள விற்கு இந்த சோலார் மூலம் பூர்த்தி செய்ய ப்படும் என கொச்சி விமான நிலைய நிர்வாக அதிகாரி வி,ஜே குரின் தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த 2013 ஆம் ஆண்டு பயணிகள் வருகைப் பகுதியில் 100 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings