இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

3 minute read
இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஏதோ மிகவும் சுலபமானது என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால், அதை தூக்கி எறிந்து விட்டுங்கள். 
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
மற்ற அனைத்து வேலைகளில் இருக்கும் சிரமங்களை போல், ஏன் அதை விட அதிகமாகவே இது கடினம் தான்.  ஆனால் இவ்வகை இணைய வேலைகளில் சில நன்மைகளும் உண்டு. 

நமக்கு தகுந்த நேரத்தில் வேலைகளை செய்து கொள்வது, யாருக்கும் கட்டுபட்டு இருக்கும் அவசியம் இல்லாதது, 

இன்னும் சொல்ல போனால் முழு நேர வேலைகளை விட அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு போன்ற சில நன்மைகள் தான் அவற்றில் ஒரு சில. 
இதனால் தான் சிலர் தனது முழுநேர வேலையில் இருக்கும் போதே இவ்வகை இணையத்தில் சம்பாதிக்கும் வழியை தேடி வருகின்றனர்.

இணையத்தில் சம்பாதிப்பது இரண்டு வகை. அதில் முதலாவது ஆன்லைன் வேலைகள் (Online Jobs), மற்றொன்று ஆன்லைன் பிஸினஸ் (Online Business). 

இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லாததை போல் தோன்றும், ஆனால் இரண்டிற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
எப்படி என்றால் ஒருவர் வேலைக்கு செல்வதற்கும் தொழில் செய்வதற் க்கும் உள்ள வேறுபாட்டை போன்றது தான் அது.

ஆன்லைன் வேலைகள் (Online Jobs) என்பதை இணையத்தில் மற்றவர்க ளுக்காக வேலை செய்யும் முறை என்றும் சொல்லலாம்.

இம்முறை என்பது அலுவலகத்திற்க்கு செல்லாமல் மற்றபடி அலுவலக வேலைகளை போன்றதே, இதில் உங்கள் திறமைகளுக் கேற்ப, 

நீங்கள் அறிந்து வைத்திருக்கும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப, வேலைகளை தரும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடமிருந்து வேலைகளை பெற்று
அதை தகுந்த முறையில் செய்து பணம் ஈட்டுவது. இதை நீங்கள் முறை படுத்துவதன் மூலம் இதனை உங்களின் தொழிலாகவும் ஆக்க முடியும். 

இந்த வகையில் நீங்கள் செய்யும் வேலைகளின் திறன் மற்றும் வேலை செய்யும் நேரம் போன்ற வற்றை முறையிட்டு

அதன் அடிப்படையில் உடனுக்குடன் அல்லது குறிப்பிட்ட காலத்திற் க்குள் அதற்கான வருமானத்தை பெறலாம்.

ஆன்லைன் பிஸினஸ் (Online Business)
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஆன்லைன் பிஸினஸ் என்பது, மற்ற பிஸினஸ் போலவே தான், எப்படி ஒரு தொழிலில் நீங்கள் செய்யும் நேரத்தை பொருத்து

அதன் வருமானத்தை தீர்மானிக்க முடியாதோ அதை போலவே இதில் நேரம் மட்டும் முக்கிய மானதல்ல, நீங்கள் செய்யும் வேலையின் தன்மை மற்றும் அதன் சாதனைகள் தான் முக்கியம்.

சளித்தேக்கத்தை வெளியேற்றும் வல்லாரை !

இம்முறையில் உங்களின் உழைப்பின் பயனை அடைய சிறிது காலம் ஆகலாம், ஏன் அடைய முடியாமலும் போகலாம், ஒரு தொழிலில் எப்படி லாபம் நஷ்டம் சகஜமோ அதை போலவே ஆன்லைன் பிஸினஸிலும். 

ஆனால் இதில் நஷ்டம் என்பது பெரும்பாலும் நீங்கள் அதற்கு செலவு செய்த நேரமாக இருக்கலாம். 

ஆனால் இம்முறையில் சாதிக்கும் பட்சத்தில், நீங்கள் தூங்கும் போதும், இத்தொழில் உங்களுக் காக பணமீட்டி கொண்டி ருக்கும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

உதாரணத் திற்க்கு சொல்ல வேண்டு மென்றால், ஒருவர் ஒரு நிறுவனத் திடமிருந்தோ அல்லது தனி நபர் ஒருவருக்கோ 

இணையத்தில் அவர்களுக்கு தேவையான வேலையை செய்து கொடுத்து அதன் மூலம் சாம்பதிக்கலாம் இதனை ஆன்லைன் வேலை என்கிறோம். 

இதில் செய்யும் வேலையின் கால அளவு அல்லது வேலையின் அளவை பொருத்து உங்களு க்கான வருமானம் இருக்கும்.
ஒருவர் ஒரு இணைய தளத்தை அமைத்து அதனை பிரபலப்படுத்தி, அதில் விளம்பரங் களை பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம். இதில் விளம்பர வருமானம் பெற இணையதளத்தை அமைக்க வேண்டும்.

அதை பிரபல படுத்த வேண்டும், விளம் பரத்தை பெற வேண்டும். இவை அனைத்தும் செய்து வருமானம் பெறுவதால் இதை ஆன்லைன் பிஸினஸ் எனலாம். 
ஆன்லைன் வேலை மற்றும் தொழிலை இப்படியும் சொல்லலாம். அதாவது, தேவைக் களுக்கு (requirement) ஏற்ப வேலை செய்து தருவதை ஆன்லைன் வேலைகள் எனவும்,

வேலையை செய்து விட்டு அதனை கொண்டு பணம் சம்பாதிக்கும் முறையை ஆன்லைன் பிஸினஸ் எனவும் கூறலாம். இவ்விரண்டு முறையிலும் பல்வேறு வகையில் பணமீட்ட வழிகள் உள்ளன
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings