ஐஸ் கிரீம், நூடுல்ஸ் மீன்களில் தயாரிப்பு !

மீன் குழம்பு , மீன் வருவல், மீன் கட்லெட், மீன் சூப் சாப்பிட்டு இருக்கலாம். மீன் ஐஸ்கிரீம், மீன் நூடுல்ஸ் சாப்பிட்டது உண்டா? இனி ஆரோக்கி யமான இந்த ஐஸ்கிரீம், நூடுல்ஸ் களையும் சாப்பிடலாம்.
 ஐஸ் கிரீம், நூடுல்ஸ் மீன்களில் தயாரிப்பு !
இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மீன்வளத் தொழில் நுட்பக் கழகம் இதை உருவாக்கி உள்ளது.

மீன்களின் புரதத்தில், மனிதர்களுக்கு தேவை யான அனைத்து வகை அமினோ ஆசிட்கள் இருப்பதால், சத்தான உணவாக உள்ளது. இதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகமாக உள்ளது.

மீன் ஐஸ்கிரீம் : 

மீன்களை பயன்படுத்தி பல்வேறு உணவு வகைகள் தயாரிக் கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிதாக மீன் ஐஸ்கிரீம் மற்றும் மீன் நூடுல் ஸ் தயாரி க்கப்பட உள்ளன.

மீன் ஐஸ் கிரீமுக்கு, மாரிகிரீம் என்று பெயரிடப் பட்டுள்ளது. வேக வைக்கப் பட்ட மீனுடன், நீர், சர்க்கரை, வெண்ணெய், முட்டை, தேவை யான பிளேவர் உள்ளிட் டவை சேர்க்க ப்பட்டு, மாரிகிரீம் தயாரிக்க ப்படுகிறது.
ஐஸ் கிரீம், நூடுல்ஸ் மீன்களில் தயாரிப்பு !
இவை அனைத்தும் ஒன்றாக சேர்க்கப் பட்டு நன்றாக கலக்கப் பட்டு, பசை போல ஆக்கப்ப டுகிறது. இக்கலவை பால் பதத்துக்கு வந்தவுடன், மைனஸ் 20 டிகிரியில் உறைவிக்க ப்படுகிறது.

மீன்களில் இருந்து நூடுல்ஸ் : 

இதன் பின்னர், பல்வேறு பகுதிக ளுக்கு சப்ளை செய்யப் பட்டு, விற்பனை செய் யப்படுகிறது.மீன் ஐஸ்கிரீம் களில் மீன் வாசனை இருக்காது.

ஐஸ் கிரீம் தயாரிப் பதற்கு முன்பே, மீன் வாசனையை போக்கும் வகையில் தொழில் நுட்பங்கள் பின்பற்ற ப்படும்.

இந்த ஐஸ் கிரீம்கள் மற்ற வற்றை போல, சுவையாக இருப்ப தோடு, சத்தான உணவா கவும் இருக்கும்.

இதே போல, மீன்களில் இருந்து நூடுல்ஸ் தயாரிக்க ப்படுகிறது. சிறிய வகை எலும்பு மீன்கள் பொடியாக்க ப்படுகின்றன.

ஐஸ் கிரீம், நூடுல்ஸ் மீன்களில் தயாரிப்பு !
அதன் பின்னர், இவை வழக்கம் போல, நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்களுடன் கலக்கப்ப டுகின்றன.

வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களைப் போலவே, நூடுல்ஸ் தயாரிக்கப் படுகின்றன.
சிறிய ரக மீன்களில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம். எனவே, இந்த நூடுல்ஸ் வகையும் சத்தான உணவாக இருக்கும்.
Tags:
Privacy and cookie settings