கருப்பு சருமம் ஆரோக்கியமானதா?

இன்றைய தலைமுறை யினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர்.

 கருப்பு சருமம்


* கறுப்பாக இருந்தாலும், “களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெள்ளை தோல் மட்டும் இருந்து விட்டால் போதாது; முகம் களையாக இருப்பது அவசியம்.

அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில், விதவித அலங்காரங் களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர் களுக்குத் தான் அதிகம் பொருந்தும்.

* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர் களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில் லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகப்பருவால் அவதிப் படுவதை, கண் கூடாக பார்க்கலாம்.

* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கும், உடல் வாகிற்கும் பொருத் தமான ஆடை, அலங்காரம் செய்து கொண்டால், அவர்களை விட அழகானவர் கள் வேறு யாரும் இருக்க முடியாது.

* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் கறுப்பானவர்களை, மே லும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் சிவப் பானவர்களை விட, கறுப்பானவர் களுக்குத் தான் எடுப்பாகத் தோன்றும்.
ஆடை,


* சருமத்திற்கும் உணவு தேவைப் படுகிறது. வாரத்தில் ஒரு நாளாவது, சருமத் திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு போன்ற

எதையாவது ஒன்றை தடவி, ஊற விட்டு, கழுவி வந்தால் இயற்கை மற்றும் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.

* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கிய மான சருமம் என்று சந்தோஷப் படுங்கள். அதுதான் உண்மை.

நீங்கள் கறுப்பான தேகம் கொண்ட வர் என்றால், அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், இன் றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!
Tags:
Privacy and cookie settings