1. இத்தொழுகை ஜமா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.
2. ஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும்.
3. ஜனாஸாத் தொழுகையை வாரிசுரிமை பெறக்கூடிய தந்தை, மகன் போன்ற உறவுக்காரர்கள் தொழுவிப்பதே சிறந்தது.
4. தொழுவிப்பவர் ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் உடம்பின் நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.
5. ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் தனித்தனியாகவோ அல்லது அனைத்திற்கும் பொதுவாக ஒரே முறையிலேயும் தொழுகை நடத்தலாம்.
6. மார்க்கத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்தவர் பெரும் பாவங்களில் திளைத்தி ருந்தவர், கடன்காரர், தொழுவிக்கப் படாமல் அடக்கம் செய்யப் பட்டோர்,
தொழுகை நடத்த எவரும் இல்லாத ஓர் இடத்தில் மரணித்தவர் போன்ற அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.
7. ஜனாஸாத் தொழுகை நான்கு தக்பீர்களைக் கொண்டதாகும்.
8. தொழுபவர் (இமாம், மஃமூம்) ஜனாஸாத் தொழுகையை நிறை வேற்றுகி றேன் என்ற எண்ணத்துடன் தனது இரு கைகளையும் காது வரை உயர்த்தி அல்லாஹ { அக்பர் எனக் கூறி உயர்த்திய இரு கைகயையும் நெஞ்சின் மீது கட்டிக் கொள்ள வேண்டும்.
9. முதல் தக்பீர் பின் பிஸ்மியுடன் அல்ஹம்து சூராவை மொளனமாக ஓத வேண்டும்.
10. இரண்டாவது தக்பீருக்குப் பின் அத்தஹ்ஹிய்யாத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும்.
11. மூன்றாவது தக்பீருக்குப் பின் ஜனாஸாவுக் காக பிரார்த்திக்க வேண்டும்.
12. நான்காவது தக்பீருக்குப் பின்னும் ஜனாஸாவுக் காக பிரார்த்திக்க வேண்டும். பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனக் ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்.