மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி !

ஜார்க் கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் மாநில காவல்துறையில் குழந்தை காவலராக நியமிக்கப் பட்டுள்ளார்.
மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி !

லட்டேகார் மாவட்டம், பரனி காட்டுப் பகுதியில் கடந்த மார்ச் இறுதி வாரத்தில், பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாவோயிஸ்ட் கொல்லப் பட்டனர். 

அவர்களுடன் இருந்த பாலமுனி என்ற சிறுமி காயமடைந்தார். இந்நிலையில் பாலமுனி இறந்து விட்டதாக கருதிய மாவோயிஸ்ட்கள், அவரை ஒரு பள்ளத்தில் தள்ளி இலைகளால் மூடி விட்டு தப்பி விட்டனர். 

பின்னர் போலீஸாரால் மீட்கப்பட்ட பாலமுனி, 1 மாத சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். 

லட்டேகார் மாவட்ட கிராமம் ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்த பாலமுனி, மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்டு, சமையல் மற்றும் பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார். 

நாள் முழுவதும் வேலை, அடி உதை என மிகவும் துயரமாக இருந்த எனது கடந்த காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்கிறார் பாலமுனி. 

மாவோயி ஸ்ட்களால் கடத்திச் செல்லப்படும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும் போலீஸாருடன் 

மோதலின் போது மனிதக் கேடயமாக இவர்கள் பயன்படுத்தப் படுவதாகவும் ஏஎச்சிஆர் என்று மனித உரிமை அமைப்பு கூறுகிறது. 
இந்த ஆண்டு மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலமுனி உள்ளிட்ட 3 சிறுமிகளுக்கு ஜார்க் கண்ட் போலீஸார் மறு வாழ்வு அளித்து ள்ளனர். 

ஜார்க்கண்ட உதய தினத்தை முன்னிட்டு ராஞ்சியில் சனிக்கிழமை நடை பெற்ற விழாவில் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் இவருக்கு குழந்தை காவலர் நியமன உத்தரவை வழங்கினார். 

ஜார்க்கண்ட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என்.பிரதான் கூறும் போது, பாலமுனிக்கு பணி ஏதும் தரப்படாது. அவருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் தரப்படும். அவரது படிப்பை காவல்துறை கண்காணித்து வரும். 

ஜார்க்கண்ட் காவல் துறையில் சுமார் 50 குழந்தை காவலர்கள் உள்ளனர். பணியில் கொல்லப்படும் போலீஸாரின் குழந்தைகள் இதில் சேர்க்கப்ப டுகின்றனர். 

இதில் முதல் முறையாக முன்னாள் மாவோயிஸ்ட் ஒருவர் (பாலமுனி) சேர்க்கப் பட்டுள்ளார் என்றார். 
பால முனியின் சம்பளத்தில் பாதித்தொகை அவரது கல்வி மற்றும் பிற செலவுகளுக்கு பயன் படுத்தப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். 

பால முனி கூறும் போது, காவல் துறையில் சேர விரும்பினேன். ஆனாலும் படிப்பை முடிக்க விரும்புகிறேன். காட்டில் இருந்த போது, பள்ளி வாழ்க்கையை இழந்து விட்டேன் என்கிறார்.
Tags:
Privacy and cookie settings