மெடிடேசன் செய்தால் இதய நோய் பக்கவாதம் வராது !

தினசரி இரண்டுமுறை மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப் பட்டுள்ளது.மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகி றது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். 
மெடிடேசன் - Meditation


மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சி த்தர்களின் நடைமுறை. இந்த முறைப்படி மெடிடேசன் செய்தால் இதய நோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

தினசரி இருவேளை இருபது நிமிடங்கள் வரை மெடிடேசன் செய்பவர்களு க்கு 48 சதவிகிதம் வரை மாரடைப்பு, பக்கவாதம் மூலம் மரணம் சம்பவிக் கும் வாய்ப்பு குறைகறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மெடிடேசன் மூலம் அதிகம் கோபப்படுவது கட்டுப் படுத்தப் படுகிறது. இத னால் ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் ஏற்படுவதும் கட்டுப் படுத்தப் படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

59 வயதுடைய 201 நபர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வில் ஒரு பிரிவினரின் வாழ்க்கை முறையை மாற்றும் உடற்பயிற்சி உணவு வழங்கப் பட்டது. 

மற்றொரு பிரிவினருக்கு மது மற்றும் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மெடிடேசன் செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டனர். 32 வகுப்புகளுக்குப் பின்னர் அவர்களின் பிஎம்ஐ பரிசோதிக்கப் பட்டது.
இதய நோய் பக்கவாதம் வராது


இருபிரிவி னரையும் பரிசோதித்ததில் உடற்பயிற்சி டயட்டில் இருந்தவர்க ளுக்கு உடல் எடை குறைந்திருந்தது. தினசரி மெடிடேசன் செய்தவர் களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர், மெடிடேசன் மூலம் உடலும், மனமும் இணைந்து செயலாற்று கிறது. உடலின் செயல் பாட்டை மனம் கட்டுப் படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

எனவே இதய நோயாளிகளுக்கு மெடிடேசன் முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்க லாம் என்று ஆய்வாளர்க கூறி யுள்ளனர். இந்த ஆய்வு முடிவு இதயநோய் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings