40 மைக்ரானுக்கு குறைவான பைகளுக்கு சென்னையில் தடை !

சென்னையில் நாளை முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித் தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த
 
நாளை முதல் தடை விதிக்கப் படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள து. மீறி பயன்படுத்து வோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்க ப்படும் எனவும் கூறப் பட்டுள்ளது.

பொதுமக்கள் துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 40 மைக்ரான்ஸ்க்கு குறைவாக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக் கு எதிரான இந்தத் தடை அமல்ப டுத்தப்பட உள்ளது.

மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் படுவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலும் ஹோட்டல்கள், ரெஸ்டா ரெண்ட்ஸ், திருமண விழாக்களில் தான் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இங்கு நாளொன்றுக்கு 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கின்றன.

ஒவ்வொரு நாளும் சென்னை 5,000 டன் கழிவுகளை ஏற்படுத் துகின்றது. 476 மாசு நிறைந்த நகரங்களில் 61வது இடத்தில் சென்னை உள்ளது.

டெல்லிக்கு அடுத்த படியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


இதனால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்தான் பெரும் அவதிக்கு உள்ளாகி யுள்ளனர். இது குறித்து பிளாஸ்டிக் விற்பனை யாளர்கள் சங்கத் தலைவர் ஜி.சங்கரன் முழுமையான பிளாஸ்டிக் தடை நடை முறைக்கு ஒத்துவராத ஒன்று என்று தெரிவித் துள்ளார்.
"இது மக்களை மற்ற விவகா ரங்களில் இருந்து திசை திருப்புகின்ற முயற்சி" என்றும் அவர் தெரிவித் துள்ளார்.

தமிழகம் முழுவதும் 10,000 பிளாஸ்டிக் தயாரிப் பாளர்கள் உள்ளனர். அந்த தொழிற்சாலை களை நம்பி பல்லாயிரக்க ணக்கான தொழி லாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings