பைக் வேணுமா? பிளைட் வேணுமா? பைக் வேணுமா? பாம்பு வேணுமா? – எது வேண்டு மென்றாலும் சரக்சரக் கென்று மூங்கில் மரத்திலிருந்து மிட்டாயை இழுத்து,
சில நொடிக்குள் சுற்றி நிற்கிற சிறுவர்களுக்குச் செய்து கொடுக்கிறார். 30 ஆண்டு காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர் சிறுவர் சிறுவர்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்
இவரிடம் பேசிய போது இந்த மிட்டாயை எதில் செய்கிறீர்கள்? வாட்ச் மிட்டாய், பாம்பு மிட்டாய் என்று சிறுவர்கள் இதை விதவித பெயர் களால் சொல்வார்கள்.
ஆனால், இதன் உண்மையான பெயர் பாம்பே மிட்டாய். இதைச் செய்வதற்கு முதல் தரமான சர்க்கரை தான் முக்கியம். சில இடங்களில் சர்க்கரை முதல் தரமாக இல்லாமல் கறுப்பாக இருக்கும்.

கறுப்பு நிற சர்க்கரையில் செய்தால் சரியாக வராது. அதனால் ஒரு கடையில் சொல்லி வைத்து அந்தக் கடையில் தான் தொடர்ந்து வாங்கி வருகிறேன். மிட்டாயைச் செய்வது மிக எளிமையான வழிதான்.
சர்க்கரை யோடு எலுமிச்சைப் பழச்சாறை நன்றாகக் கலந்து கொண்டு, அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்துப் பாகாக்க வேண்டும்.
அதிரசப் பக்குவத்திற்குப் பாகு வந்ததும் சட்டியை இறக்கி சர்பத் கலர் பவுடரைக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு ட்ரேயில் போட்டு நன்றாக அடிக்க வேண்டும்.
இப்படி அடிப்பது உருவங்கள் செய்வதற்கு ஏற்ற பக்குவத்தைக் கொடுக்கும். இதுதான் மிட்டாய்த் தயாரிக்கும் முறை.
இதில் உள்ள ஒரே சிரமம். பாகுவை அடித்து முடிப்பதற்குள் நம்முடைய இரண்டு தோள் பட்டையும் துவண்டு போய் விடும்.

வியாபாரம் செய்யும் போது கை வியர்வை கூட மிட்டாய் மீது படக்கூடாது என்பதற்காகத் துடைத்துக் கொள்வதற்கு ஒன்றுக்கு மூன்று துணி வைத்திருப்பேன்.
பாகில் அதிக எலுமிச்சைக் கலக்கும் போது மனிதர்களுக்கு வியர்ப்பது போல, பாகில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அதையே அவ்வப் போது துணியால் துடைத்துத் தான் கொடுப்போம்.
பாகில் அதிக எலுமிச்சைக் கலக்கும் போது மனிதர்களுக்கு வியர்ப்பது போல, பாகில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அதையே அவ்வப் போது துணியால் துடைத்துத் தான் கொடுப்போம்.
அதைப் போல இந்த மிட்டாய்ச் சாப்பிட்டால் நோய் வரும் என்பார்கள். என்னைக் கேட்டால் இதை நோய் நிவாரணி என்பேன். சீதபேதிக்கு இது அருமருந்து.
மூங்கில் மரத்திலேயே மிட்டாயை வைத்துக் கொண்டு வருவது ஏன்? சவுக்கு மரத்தில் வைத்தால் அதில் ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் போய் விடும். வேறு சில மரங்களில் நிறம் ஒட்டிக் கொள்ளும்.
இதில் ஒன்று தான் எந்தச் சிரமமும் இல்லாமல் எடுத்துப் போய் வர முடியும். எலுமிச்சைப் பழம் போட்டு செய்வதால் இந்த மிட்டாய் கெட்டுப் போகாது. ஆறு மாதகாலம் கூ ட கெடாமல் இருக்கும்.
இந்த காலத்தில் ஏகப்பட்ட புதுப்புது மிட்டாய்கள் கடைகளில் வந்திருக்கின்றன. அந்த மிட்டாய்களை வாங்காமல் இதையா தேடி வந்து வாங்கப் போகிறார்கள்.
ஆனாலும் பல்வேறு உருவங்கள் டிசைன்கள் செய்து கொடுப்பதாலேயே இன்னும் குழந்தைகள் இதை விரும்புகிறார்கள்.
ஆனாலும் இதில் உழைப்பிற்கு ஏற்ற பலனில்லை அதனால் பலரும் இத்தொழிலை விட்டு போய் விட்டார்கள் என்றார்.
ஆனாலும் இதில் உழைப்பிற்கு ஏற்ற பலனில்லை அதனால் பலரும் இத்தொழிலை விட்டு போய் விட்டார்கள் என்றார்.