தாம் கருப்பு நிறம் என்பதாலேயே நோபல் பரிசு தர மறுத்து விட்டதாக யோகா மாஸ்டர் பாபாராம் தேவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தர காண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபாராம் தேவ் பேசியதாவது: நான் அழகான தோல் கொண்ட மனிதனாக இருந்திருக்க வேண்டும்.
யோகா துறையில் நான் ஆற்றிய பணிக்காக எனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கும். ஆனால் அது மறுக்கப்பட்டு உள்ளது. நான் கருப்பாக இருப்பதால் எனக்கு நோபல் பரிசு தர மறுத்து விட்டனர். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.