ராஜஸ்தா னில் தந்தை ஒருவர், தனது 2 வயது மகள் பாலியல் தொழிலா ளியாக மாறி விடுவாளோ என்ற அச்சத்தில், அந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வினோதம் நடந்துள்ளது.
ராம் நிவாஸ் குர்ஜார் (வயது 34), மனைவி ஹேமலதா சாகு இருவரும் உதய்பூரில் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஹேமலதா விற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் தான், ராம் நிவாஸ் அவரை மணந்துள்ளார்.
மேலும் இவர்கள் இருவரு க்கும் பிறந்த மகளுக்கு 2 வயது ஆகியுள்ளது. இந்நிலையில், ராம் நிவாஸுக்கு தனது மனைவி பாலியல் தொழில் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து இருவருக்கும் இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மனைவி திங்கள் கிழமை அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி யுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த தனது 2 வயது மகளை கொன்ற ராம் நிவாஸ், குழந்தையின் சடலத்தை இரும்பு கம்பியில் தொங்க விட்டு, அதனுடன் கடிதம் ஒன்றையும் இணைத் துள்ளார்.
அந்த கடிதத்தில், தன் மனைவி பிற்கால த்தில் தனது மகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவாரோ என்ற அச்சத்தில் குழந்தையை கொலை செய்ததாக குறிப்பிட் டுள்ளார்.
மேலும், போலீஸாருக்கும் ராம் நிவாஸ் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டதால், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.
ராம் நிவாஸை போலீஸார் நீதிமன்ற த்தில் ஆஜர்படு த்தியதை அடுத்து அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
மேலும், அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.