நீங்கள் பார்ப்பது உஹது மலையின் ஒரு பகுதி. சற்று கவனமாக பாருங்கள் அந்த மலையின் நிறம் நமக்கு ஒன்றை ஞாபகப் படுத்தும். அது தான் தங்கம்".
இந்த மலைக்கு நிறைய நபிமொழிகள் உண்டு. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் , நற்செயல் களுடைய நண்மைகளின் அளவை சொல்லிக் காட்டும் போது "உஹத் மலை அளவு" என்று இந்த மலையைத் தான் அளவு கோலாக வைப்பார்கள்.
காரணம், மலை உயரம் நமக்கு பார்க்க முடிகிறது.அதனின் அடிவாரம் அல்லாஹு அறிந்தவன்.
நமக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தி; நபியவர்கள் வயிற்றில் கல்லைக் கட்டி பசியுடனும் , நெருக்கடி யுடனும் இருந்த பொழுது ,ஜிப்ரீல் (அலை) வந்து, நபியே..."சரி"ன்னு சொல்லுங்கள் .இந்த "உஹத் மலை" தங்களுக்கு தங்கமாக மாற்றப்படுமே... என்றார்கள்.
நபியவர்கள் அதை விரும்ப வில்லை. ஆனால் , 'அந்த சொல்' அம்மலையை தங்கமாக மாற்றி விட்டது.
உண்மைதான்... நாங்கள் 'அபூதாவூத்' வகுப்பில் இருக்கும் பொழுது, ஹஜ்ஜுக்கு சென்றிருந்த ஹாஜிகளில் ஒருவர் "உஹத்" மலையின் பொடிக்கற் களை கொண்டு வந்து காட்டினார்.
சுப்ஹானல்லாஹ். அந்த கற்களில் ஆங்காங்கே தங்கம் ஒட்டி யிருந்ததை பார்த்தோம்.
சுப்ஹானல்லாஹ். அந்த கற்களில் ஆங்காங்கே தங்கம் ஒட்டி யிருந்ததை பார்த்தோம்.
அம்மலையை நேரில் சென்று பார்க்கும் பாக்கியத்தை அருளாளன் அல்லாஹு எமக்கும் தந்தான். (மேலும் மேலும் அல்லாஹு நம் எல்லோருக்கும் ஹஜ்ஜும், தரிசனமும் தருவானாக).
கவனிக்க :
இறுதி நாளில் 'செல்வத்தை எடுத்துக்கொண்டு ஏழையை தேடிப்போனால் ; அவன் "நேற்று தேவையுடையவனாக இருந்தேன். இன்று என்னிடம் செல்வம் குவிந்துள்ளது "என்பானாம்'.
இன்று , ருசியான உணவு , அழகான உடை, தங்கத்தின் விலை என்னதான் உயர்ந்தாலும் நம்மிடம் தங்கம் ஜொலிப்பது, செல்போன் ஏற்றத்துக்கு தக்க நமது ஏற்றம் . எல்லாம் "நாம் செல்வந்தராகி விட்டோம்" என்பதின் அடையாளம் தான்.