வாழ்வோம் நேர்மையாக வாழ வைப்போம் தர்மத்தின் வழியாக !

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல கணக்கு பார்க்க கூடாது" செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வாழ்வோம் நேர்மையாக வாழ வைப்போம் தர்மத்தின் வழியாக !
வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள். ஒரு கட்டு கீரை என்ன விலை....? "ஓரணாம்மா" "ஓரணாவா....? அரையணா தான் தருவேன்.

நாலு கட்டு கொடுத் திட்டு போ" "இல்லம்மா வராதும்மா". "அதெல்லாம் முடியாது. அரையணா தான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய். பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம்

சென்று விட்டு "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்றாள் "முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதா ன் தருவேன்".. என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்து விட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலயா...?" என்று அந்த தாய் கேட்க "இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்" "சரி.
இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும் போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள்.

இந்தா சாப்ட்டு போ என்று கீரைக் காரியிடம் கொடுத்தாள். எல்லா வற்றையும் பார்த்து கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணா வுக்கு பேரம் பேசுனிங்க..

ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக் கூட ஆறு இட்லிக்கு மூன்றணா வருதும்மா.....? என்று கேட்க அதற்கு அந்த தாய், "வியா பாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல கணக்கு பார்க்க கூடாதுமப்பா" என்று கூறினாள்...!
Tags:
Privacy and cookie settings