கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?

சின்னது, பெரியது, வலி நிறைந்தது, வலியில்லாதது என்று கொப்புளங்களில் பல வகைகள் உள்ளன. கொப்புளங்கள் ஏற்படக் காரணங்கள் என்னென்ன? தவிர்ப்பது எப்படி? விளக்குகிறார் சரும மருத்துவர் கோமதி.
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கும் நோய்த்தொற்றின் காரணமாக கொப்புளங்கள் உருவாகும்.

ஒரு குழந்தைக்கு இருந்தால் அடுத்த குழந்தைக்கு வரும். சருமத்தில் ஏற்படும் ஏதாவது பாதிப்பினாலோ, 

உடலின் உள்ளே ஏற்படும் சில நோய்களின் காரணமாகவோ, தோலுக்கு மேல் ஏற்படும் திரவம் (Serum), சீழ் மற்றும் ரத்தம் நிறைந்த கட்டிகளை ‘கொப்புளங்கள்’ என்கிறோம். 

இது பிறந்த குழந்தைக்குக் கூட வரலாம். சிலருக்கு கை, வாய் என உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் ஓர் இடத்தில் மட்டும் வரலாம்.
சீனாவின் மனிதரை ஏற்றி செல்லும் விண்வெளி பயணம் !
அது அந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக வரலாம். ஒரே நேரத்தில் உடம்பில் பல இடங்களில் வந்தால் அது தீவிர பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

சில கொப்புளங்கள் ஆபத்தி ல்லாதவை. சீக்கிரம் குணமாகிவிடும். சிலது, பிரச்னைக்குரியவை. குணமாக நாள் பிடிக்கும்.

கொப்புளங்களை ஏற்படுத்தும் சில பொதுவான காரணங்கள்... 

மரபுக் கோளாறுகள் பிறக்கும் போதே கூட சில குழந்தைகளுக்கு உடம்பில் கொப்புளம் இருக்கும். இதற்கு பெரும்பாலும் மரபுக் கோளாறுகள் காரணமாக இருக்கும்.

அதாவது, சொந்த த்தில் திருமணம் செய்யும் தம்பதி யருக்குப் பிறக்கும் குழந்தை களுக்கு இப்பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நோய்த் தொற்று சில குழந்தை களுக்கு நோய்த் தொற்றின் காரணமாக பிறக்கும் போதே உடலில் கொப்புளங்கள் இருக்கும்.
தாய், வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த் தொற்றுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் குழந்தைக்கு கொப்புளங்கள் ஏற்படலாம். 

மண்ணில் விளையாடும் குழந்தை களுக்கும் நோய்த் தொற்றின் காரணமாக கொப்புளங்கள் வரும்.
வகுப்பில் ஒரு குழந்தைக்கு இருந்தால் அடுத்த குழந்தைக்கு வரும். வீட்டில் ஒருவருக்கு இருந்தால் அனைவருக்கும் வரும். சொறி, சிரங்கு போன்ற பலவிதமான நோய்த் தொற்றுகளாலும் வரும்.

சின்னம்மை போன்ற வைரஸ் நோய் தொற்றுகளாலும் கொப்புளங்கள் வரலா ம். அப்போது அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். உடம்பில் பல இடங்களில் வரும். பலநாட்கள் இருக்கும்.

‘அக்கி’ என்ற நோய் வந்தாலும் கொப்புளம் வரும். அக்கியின் காரணமாக கொப்புளம் வந்தால் கடுமையான வலி இருக்கும்.

இரண்டு வாரங்களில் சரியாகும். பூச்சிக் கடி குழந்தை களுக்கு பூச்சிக்கடி மற்றும் கொசுக் கடியின் காரணமாக கூட கொப்புளங்கள் வரலாம்.
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
ரசாயனங்கள் அலர்ஜிநாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் உதாரணத்து க்கு சோப், டிடெர்ஜென்ட், அழகு சாதனங்கள் போன்ற வற்றால் ஏற்படும் அலர்ஜி யின் காரணமாகவும் கொப்புளங்கள் வரலாம்.

அதிலுள்ள வலுவான ரசாயனம் மென்மை யான சருமம் உள்ளவர் களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மருந்து அலர்ஜி சிலருக்கு பென்சிலின், வலி நிவாரணிகள் போன்ற மருந்து மாத்திரைகள் ஏற்றுக் கொள்ளாது.

இது போல ஒரு சிலருக்கு வேறு சில மருந்துகள் ஏற்றுக் கொள்ளாமல் போகும். அது ஏற்படுத்தும் அலர்ஜி சிலருக்கு கொப்புளங்களாக வெளிப்படலாம்.

நீரிழிவு நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்.
உராய்தல் இறுக்கமான அல்லது மோசமான நிலையில் உள்ள காலணி களை தொடர்ந்து பயன்படுத்தும் போது தொடர் உராய்வினால் அந்த இடத்தில் கொப்பு ளங்கள் வரலாம்.

சிலருக்கு தொடர்ந்துசெல் கேம் விளையாடிக் கொண்டிருப்ப தால் ஏற்படும் உராய்வினால் விரலில் கொப்புளங்கள் வரும். இவற்றை Friction blister என்பார்கள்.

அதிக சூடுஅதிக சூடு குறிப்பிட்ட ஓர் இடத்தில் தாக்கும் போது அந்த இடத்தில் கொப் புளங்கள் வரலாம். 

வெயில் மட்டுமில்லாமல் தீச்சூட்டி னாலும் கொப்பு ளங்கள் வரலாம். சில நேரங்களில் உடனடியாக கொப்புளம் வரும்.
சில நேரங்களில் தீக்காயம் பட்ட இடத்தில் இரண்டு நாள் கழித்து கொப்புளம் வரலாம்.

ஆட்டோ இம்யூன் குறைபாடுகள் (SLE) Systemic lupus erythematosus என்கிற ஆட்டோ இம்யூன் குறைபாடு இருப்பவர் களுக்கு சருமத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் கொப்புளங்களும் ஏற்படும்.

புற்றுநோய் போன்ற பிரச்னை களாலும் கொப்புளங்கள் வரலாம். உடம்பில் எங்கு வேண்டு மானாலும் கொப்புளங்கள் வரலாம் என்றாலும்

குறிப்பாக கை, கால்களில் அதிகமாக வரும். பெரும்பாலான கொப்புளங்கள் ஒரு வாரத்துக் குள் தானாகவே சரியாகி விடும்.

உள்ளிருக்கும் திரவம் வற்றி மேல் தோல் உரிந்து விடும். அதை பிய்த்தெறிய வேண்டாம். தானாகவே உதிர்ந்து விடும்.

மருந்துகள் தேவைப் படாது. சில கொப்புளங்கள் எங்காவது பட்டு தானாக உடைந்து விடும். அப்போது, அதை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
நாமாகவே மருந்துக் கடைகளில் மருந்துகள் வாங்கி தடவாமல் மருத்து வரிடம் செல்வது தான் சிறந்தது. மருத்துவர்கள் முறையான சிகிச்சை செய்து குணப்படுத்தி விடுவார்கள்.

சீழ்க் கோர்த்துள்ள கொப்புளங்களுக்கு கட்டாயம் ஆன்டி பயாட்டிக் மருந்துகள் பயன்படுத்த வேண்டி இருக்கும்.

கொப்புளங்களை தவிர்க்க... 
கொப்புளங்கள் ஏற்படக காரணங்கள் என்ன?
திடீரென்று ஏற்படும் தீக்காயம் போன்ற வற்றினால் ஏற்படும் கொப்புளங்களை தவிர்க்க முடியாது என்றாலும்

ஒரு சில காரண ங்களால் ஏற்படும் கொப்புளங்களை ஒரு சில வழிமுறைகளை பின் பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம்.

மரபுக் கோளாறுகளால் ஏற்படுவதை தவிர்க்க சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது. தொற்று நோய்களை தவிர்க்க சுத்தமாக இருக்க வேண்டியது அவசி யம்.
பொடுகு என்றால் என்ன ?
குழந்தைகளை காலையில் மட்டு மில்லாமல் மாலையில் விளையாடிய பின்னரும் குளிக்க வைப்பது அவசியம். 

பூச்சிக்கடிகளால் ஏற்படும் கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்க பூச்சிக் கடிக் காமல் கவனமாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை.
கொசுவலை போன்ற வற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கைகளில் ரசாயனங்களால் அதாவது, துணி துவைக்கும் சோப், பாத்திரம் கழுவும் பவுடர் போன்ற வற்றால்

கொப்புளங்கள் வராமல் இருக்க கைகளில் கிளவுஸ் போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும். சில காஸ்மெடிக் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க, அவற்றை தவிர்ப்பதுதான் ஒரே வழி.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு பிராண்டு ஹேர் டை ஒத்துக் கொள்ள வில்லை என்றால் அதை விட்டு விட்டு அடுத்த பிராண்டு டை போடக் கூடாது.

ஏனென்றால் உங்களுக்கு அலர்ஜி செய்யும் மருந்து அந்த ஹேர் டையிலும் இருக்கலாம். டையில் பயன்படுத்தபடும் PPD என்னும் அடிப்படை ரசாயனம் எல்லா டையி லும் இருக்கும்.
பால் கலக்காத டீ....உடல் எடை கணிசமாக குறையும் !
அதனால் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் எல்லா விதமான ஹேர் டையையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். மருந்துகளால் அலர்ஜி ஏற்பட்டால் எந்த மருந்தினால் ஏற்படுகிறது எனக் கண்டறிய வேண்டும்.
அந்த மருந்துகளுக்கு பதில் வேறு மருந்துகளை மருத்துவரிடம் கேட்க வேண்டும். கை, கால், பாதங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

நல்ல தரமான காலணிகளை உபயோகப்படுத்த வேண்டும். இறுக்கமான காலணிகளை அணியக்கூடாது. தடிமனான சாக்ஸ் (Moisture wicking socks) பயன்படுத்த வேண்டும்.

ஈரத்தை உறிஞ்சும் வண்ணம் டால்கம் பவுடரும் உபயோகப்படுத்தலாம். சர்க்கரை நோயால் ஏற்படும் கொப்புளத்துக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அள வைக் கட்டுக்குள் வைப்பது நல்லது.

அதிக வெப்பத்தினால் ஏற்படும் கொப்புளத்தை தவிர்க்க வெளியில் செல்லும் போது சன் ஸ்கிரீன் க்ரீம் தடவிக் கொள்ளலாம்.
உடல் முழுவதும் கொப்புளங்களால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு, தோல் உரியும் நிலை ஏற்படுபவர்களுக்கு தீவிரமான மருத்துவ கண்காணிப்பும், தொடர் சிகிச்சையும் முக்கியம்.
Tags:
Privacy and cookie settings