வாட்ஸ்ஆப் தகவலை 3 மாதங்களுக்குள் Delete செய்தால் குற்றம் ?

வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்ட வற்றில் பரிமாறப் படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக் கூடாது. இந்தக் கட்டுப் பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
 வாட்ஸ் ஆப் தகவல்களை 3 மாதங்களுக்குள் Delete செய்தால் சட்டப்படி குற்றம்!!?
சமூக தகவல் தளங்களான இந்த வழிகளில் வரும் தகவல்கள் குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாகவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. 

அவற்றைப் பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பும் தகவலை படிக்க முடியும். இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. 

இது அமல்படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்டவற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படும்..

இந்தப் புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு இணையம் மூலம் தகவல்களைப் பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டுச் சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. 

அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்காரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும்.

இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும். 

மேலும் இந்த வசதியைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

இந்தப் புதிய சட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings