பித்தக் கற்களின் பெரும்பகுதி பல கற்துகள் களால் ஆனவை தான். கொலஸ்ட்ரால், கால்ஷியம், கார்பனேட், பிலிருபினேட் போன்ற கலவையின் கலவையாகத் தான் இருக்கின்றன.
உடல் பருமனாக இருப்பவர் களுக்கு… பரம்பரை காரணமாக.. கிட்னி, கல்லீரல் பாதிக்கப் பட்டவர் களுக்கு… கருத்தடை மாத்திரைகள் அதிகமாகச் சாப்பிடுப வர்களுக்கு.. ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கு..
செக்ஸ் ஹார்மோன் மாற்றங்ளால்.. சிறு குடல் பாதையில் ஏற்படும் வியாதிகள் காரணமாக.. அடிக்கடி விரதம் இருப்பதால்… என்ன..தமாஷ் பண்றீங்களா?
“லங்கணம் பரம ஒளஷதம்” (பட்டினியே மருந்து) என்று பெரிய வங்களே சொல்லியி ருக்காங்களே! விரதம் இருக்கிறது நல்லது தானே? என்று கேட்கலாம்.
வேளாவேளாக்குப் போதுமான உணவு கிடைக்காத போது, பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரந்து, கற்களாக உறைந்து விடும் அபாயம் இருக்கிறது.
தீவிர டயல்டில் இருக்கும் இளம் பெண்களுக்கும் பித்தப் பையில் கற்கள் உண்டாவதன் காரணம், பட்டினி ஃபேஷன்தான்!
பித்தக் கற்களின் அறிகுறிகள் என்ன?
தீவிர டயல்டில் இருக்கும் இளம் பெண்களுக்கும் பித்தப் பையில் கற்கள் உண்டாவதன் காரணம், பட்டினி ஃபேஷன்தான்!
பித்தக் கற்களின் அறிகுறிகள் என்ன?
விதவிதமான வலிகள் ஏற்பட்டு, மாரடைப்பு வலியோ என்று கூடப் பயம் ஏற்படும். மார்பு எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையே வலிக்கும்.
வயிற்றின் மேற்புறம் தோன்றும் வலி, முதுகுப் பக்கம், ஏறி, வலது தோள் பட்டையில் கடுப்பெடுக்கும்.
வாந்தியும் குமட்டலும் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு, குண்டூசியின் தலை அளவுக்குக் கூட வலி இருக்காது. ஆனால் பாதிப்புகள் மெகா சீரியல் போல் நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஆபரேஷன் மட்டும் தான் தீர்வா?
இல்லை, பித்தப்பைக் கற்களைக் கரைப்பதற் கென்றே மருந்துகள் உள்ளன. சில சமயம் பித்தநீர்ப் பைக்குள் அதிர்வலை களைப் பாய்ச்சி, கற்களைப் பொடியாக்கி, மலத்துடன் வெளியேற்றி விடலாம்.
ஆனால், இந்த முறை கணையத்தில் வீக்கம், பித்தப்பையில் அழற்சி உள்ளவர் களுக்கும், கர்ப்பிணிப் பெண்களு க்கும் ஏற்றதல்ல.
லேப்ராஸ்கோப்பி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை முறையில் பித்தக்கற்களை வலியின்றி, மிகச் சுலபமாக நீக்கி விடும் வசதி உள்ளது.
சில சமயம் குடல் ஒட்டுதல் அதிகம் இருந்தாலோ, பொது நாளத்தில் கட்டி, கல் இருந்தாலோ, ஓப்பன் சர்ஜரி தேவை ப்படலாம். பித்தப்பைக் கற்களை நீக்கா விட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.