WiFi மூலமாக உங்கள் ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. Power Over WiFi என்ற புதிய தொழில் நுட்பத்தை வாஷிங்டன் பல்கலை கழக ஆராய்ச்சி யாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன் மூலம், 30 அடி தூரத்தில் இருந்து கூட உங்கள் ஸ்மார்ட்ஃபோனை வயர் ஏதும் இன்றி WiFi மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பம், WiFi-ன் RF சிக்னல்களை நமது ஸ்மார்ட் ஃபோனுக்கு தேவையான DC (Direct Current) ஆக மாற்றுவதன் மூலம் சார்ஜ் ஸ்மார்ட் ஃபோனை செய்கிறது.
இவர்கள் சோதனை செய்து பார்த்தவரை 28 அடி தூரம் வரையில் இது வேலை செய்வதாகவும், அதே நேரம் நமது ஸ்மார்ட் ஃபோனுக்கு கிடைக்கும் WiFi இன்டெர்நெட்டின் வேகமும் குறையாமல் கிடைக்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனை பயன்படுத்த புதியவகை ரௌட்டர்கள்(Routers) பயன்படுத்த வேண்டி யிருக்கும். இதனை மிக விரைவாக அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஆராய்ச்சி யாளர்கள் இறங்கி யுள்ளனர்.