இலவசமாக 100 கழிவறைகளை கட்டிக் கொடுத்த மேஸ்திரி !

டெல்லியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போஜ்புரா கிராமத்தில் 65 வயதான திலீப்சிங் மால்வியா என்பவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இலவசமாக 100 கழிவறைகளை கட்டிக் கொடுத்த மேஸ்திரி !
இவர் தனது கிராமத்தில் 100 கழிவறைகளை எவ்வித கட்டணமும் வாங்காமல் இலவசமாக கட்டிக் கொடுத்திருப்பது அனைவரின் பாராட்டையும் ஈர்த்து ள்ளது.

'மான் கீ பாத்' வானொலி உரையில் இதற்கு பிரதமர் மோடி தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். திலீப் சிங் மாலவியாவின் இந்த உதவியை ஒரு புனிதமான பணியாகவே தான் கருதுவதாகவும்,

திலீப்பை போல நூற்றுக்கணக்கா னவர்கள் இந்த நாட்டில் சேவைகளை செய்து வருவதாகவும், இவர்கள் இந்த நாட்டின் நம்பிக்கையாகவும், வலிமையாகவும் திகழ்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்தார். 

இது பற்றி மேஸ்திரி திலீப் செய்தியாளர்களுக்கு தெரிவித்தவை பின் வருமாறு: 

எனது கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் கிடையாது. இதனால், குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நோய்களும் பரவி வருகின்றன.
எனவே, நான் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிவறை இருக்க வேண்டும் என்பதை எனது கிராம மக்களிடம் வலியுறு த்தினேன்.

அதை கேட்டு சிலர் கடனுதவி பெற்று கழிவறைகளை கட்ட முன் வந்தனர். சிலர் அவர்களிடம் இருக்கும் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கழிவறை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட் களை வாங்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து எங்கள் கிராமம் முழுவதுமே கழிவறையை கட்ட முன் வந்தது. நானும் எவ்வித கட்டணமும் வாங்காமல் கட்டிக் கொடுக்க முடிவு செய்தேன்.

இதை பாராட்டி யிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்க ளுக்கு நாங்கள் நன்றி யை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மேஸ்திரி திலீப் தெரிவி த்தார்.
Tags:
Privacy and cookie settings