வடமேற்கு பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டனர். கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தான் நகரில் தேசிய தரவுத்தள அலுவலகம் உள்ளது.
இங்கு அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டை வேண்டி இன்று ஏராள மான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அலுவலக த்திற்குள் நுழைய முயன்றான். அவனை பாதுகாவ லர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால், தனது மோட்டார் சைக்கிளை நுழைவு வாயிலில் மோதியதுடன், தனது உடலில் கட்டியி ருந்த வெடி குண்டையும் அவன் வெடிக்கச் செய்து ள்ளான்.
அப்போது அலுவலக த்தின் கதவு, ஜன்னல்கள் நொறுங்கின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொது மக்கள் தூக்கி வீசப்ப ட்டனர்.
அப்பகுதி முழுவதும் உடல்கள் சிதறிக் கிடந்தன. பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மீட்புப் பணிகள் முடுக்கி விடப் பட்டன. இந்த தாக்குதலில் 12 பேர் பலியானதாகவும், 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக் கின்றன.
காயமடைந் தவர்களில் சிலரது நிலை கவலைக் கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது.