பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்ற 13 வயது மாணவி !

ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவி அதனை மறைத்து தினமும் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.
 
சம்பவத்தன்று பள்ளிக் கூடத்தில் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போது மாணவி வயிறு வலிப்பதாகவும் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறினாள்.ஆசிரியையும் அதற்கு அனுமதி அளித்தார். 3-வது மாடியில் இருந்து கீழ்தளத்தில் உள்ள கழிவறைக்கு அவர் இறங்கி சென்றார். 

கழிவறையில் சென்ற அவளுக்கு பிரசவ வலி ஏற் பட்டது. கழிவறையிலேயே பெண் குழந்தை பெற்றார்.கழிவறை முழுக்க ரத்தம் இருந்ததை பார்த்த சக மாணவி ஆசிரியையிடம் தெரிவித்தார்.

ஆசிரியை வந்து பார்த்த போதுதான் மாணவி குழந்தை பெற்றது தெரிய வந்தது.மாணவி கர்ப்பமாக இருந்தது கூட அறியாமல் ஆசிரியர்கள் இருந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது. சிறுமி ஒல்லியாக இருந்ததால் அவரது வயிறு பகுதி கர்ப்பமாக் இருந்தது தெரியவில்லை அவரும் தனது துப்பட்டாவால் மறைத்து நடமாடி உள்ளார். 

மாணவி கர்ப்பமாக இருந்தது பெற்றோர்களுக்கு முன்பே தெரியும். ஆனால் அதனை மறைக்கும் வகை யில் ஆடை அணிய செய்து பள்ளிக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மாணவி கர்ப்பத்துக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் தான் என கூறப்படுகிறது. போலீ சார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings