வெள்ள பாதிப்புக்கு ரூ260 கோடியை ஒதுக்கிய காக்னிசன்ட்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தங்களுடைய பணியாளர்களுக்குமாக மொத்தம் ரூ260 கோடியை ஒதுக்கியுள்ளது ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட். 
சென்னை வெள்ளத்தில் பல ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தால் மூழ்கிப் போயின. காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெள்ளம் காட்டாற்று அருவி போல பாய்ந்தோடியது. 

இதனால் ஐ.டி. நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இதில் பணிபுரிந்தவர்கள் பெரும்பாலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தவரே...இவர்கள் உயிர்பிழைத்தால் போதுமென கண்ணீர் கதைகளுடன் சென்னையை விட்டு வெளியேறினர்...

இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக ஐ.டி. நிறுவனமான காக்னிசன்ட், தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதி மற்றும் பல்வேறு என்.ஜி.ஓக்கள், அறக்கட்டளைகளுக்கு மொத்தமாக ரூ65 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காக்னிசன்ட் பணியாளர்கள் உள்ளிட்ட நிறுவனம் சார் நடவடிக்கைகளுக்கு ரூ195 கோடியையும் காக்னிசன்ட் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings