சோலார் பேனல் மோசடி விவகாரம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன்
முன் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் என கூறப்படும் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றபோது, சரிதா நாயர் ஆஜர் ஆனார் சதிரா நாயரை பார்த்து நீதிபதி, 2010 ஆம் ஆண்டில் சிறையில் வைத்து நீங்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த சரிதா, இது எனது தனிப்பட்ட விடயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என்று கூறி கதறி அழுதார்.
சரிதா நாயருக்கும், பிஜு மேனனுக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது, இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் மோசடி வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சரிதா நாயர் 2 வது குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும் தொழில்ரீதியாக மட்டுமே பழக்கம் உள்ளது எனவும் சரிதா நாயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
நேற்று விசாரணை நடந்தபோது பிஜு ராதாகிருஷ்ணன் கணவன் இல்லை என்றால், 2010ல் சிறையில் வைத்து பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என நீதிபதி சிவராஜன் கேட்டார் .
இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா நாயர், அது எனது தனிப்பட்ட விஷயம், அதில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை என ஆவேசமாக கூறினார்.
சரிதா நாயர் திடீரென நீதிபதி முன்னிலையில் கதறி அழுதார். அப்போது சரிதா நாயரின் மூக்கிலிருந்து சிறிது ரத்தமும் வந்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணையை நீதிபதி சிவராஜன் ஒத்திவைத்தார்.