சிங்கம் 3' மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், ஆனந்த் ஷங்கர் ஆகியோர் இயக்கவிருக்கும் படங்களுக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' படத்துக்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
விரைவில் இசை வெளியீடு நடைபெற இருக்கும் இப்படம் டிசம்பரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'கெத்து' படத்தைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் படம் ஏது என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. பல்வேறு இயக்குநர்கள் தங்களது அடுத்த படத்தின் இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
"'சிங்கம் 3', 'ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு', 'கெளதம் மேனன் - ஜெயம் ரவி', 'ஆனந்த் ஷங்கர் - விக்ரம்' ஆகிய படங்களுக்கு இசையமைக்க இருக்கிறேன்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளித்திருக்கிறார்.