கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது !

1 minute read
தமிழகத்தில் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டி யுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது, சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட ங்களில் 
வெள்ளம் முழுமையாக வடியாததால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப் படுகிறது.
வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்ட ங்களில் பெரும்பாலன வீடுகளில் வெள்ளம் புகுந்து பேரழிவை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் பல இடங்களில் பெரும் பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதாலும் சென்னை, கடலூர் உட்பட பகுதிகளில் 400 பேர் வரை உயிரிழந் துள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது. 

வெள்ளம் முழுமையாக வடியா ததாலும், பலரை காணவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிப் பதாலும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளதாக கூறப் படுகிறது.

தற்போது சென்னையின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத பலரது சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 50 வரை சடலங்கள் வரை மீட்கப்பட் டுள்ளதாக கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings