மழைக்கு பலியான 9 குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்.. முதல்வர் !

தமிழகத்தில் கன மழையின் காரணமாக உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தி னருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். 
மழைக்கு பலியான 9 குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்.. முதல்வர் !
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக த்தில் கனமழை காரணமாக 4.12.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், 

ராயகிரி பகுதியைச் சேர்ந்த மாடன் என்பவரின் மகன் சிவன் பாண்டியன்; சென்னை, பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் மற்றும் அவரது மனைவி நிர்மலா புஷ்பம்; 

5.12.2015 அன்று செய்யார் வட்டம், திருவத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த காங்கன் என்பவரின் மகன் சந்தானம் 6.12.2015 அன்று செய்யார் வட்டம், விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளை என்பவரின் மகன் அருண்குமார்; 

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்க நல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி நளினி ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

5.12.2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், முக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மொட்டை என்பவரின் மகன் 

கண்ணன் 6.12.2015 அன்று கெங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த நன்னி என்பவரின் மகன் சின்னசாமி;

8.12.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் மாரிச்செல்வன் 

ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த 

இந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாப த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த வர்களின் குடும்பங் களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்" எனக் குறிப்பிட் டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings