உலகின் மிகப் பிரபல மான தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத் திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 7-வது இடத்திலும் உள்ளதாக ஓர் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ஓ.ஆர்.பி இன்டர் நேஷனல் என்ற அமைப்பின் தலைமை யில் உலக அளவில் 65 நாடுகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது.
அதன் முடிவில், உலகளவில் மிகவும் பிரபல மான தலைவராக அமெரிக்க அதிபர் ஒபாமா இருக்கிறார்.
அவருக்கு ஆதரவாக 59 சதவீதம் பேரும், அவரை விரும்ப வில்லை என்று 29 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித் துள்ளனர்.
அவரைத் தொடர்ந்து, இரண்டா வது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், மூன்றாவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும் உள்ளனர்.
அதற்கு அடுத்த படியாக, நான்காவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தும், ஐந்தாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், ஆறாவது இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் அடுத்தப் படியாக ஏழாவது இடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிடித்துள்ளார்.
அவரை ஆதரித்து 24 சதவீதம் பேரும், அவரை விரும்ப வில்லை என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் 8-வது இடத்தையும், சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் 9-வது இடத்தையும்,
ஈரான் அதிபர் ஹஸன் ரூஹான் 10-வது இடத்தையும் பிடித்து ள்ளதாக அந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.