பூச்சிகளை அழிக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் !

கண் மூடித்தன மாக பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்து வதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப் பட்டு விவசாயம்


பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பார் தலைமை யில் நடத்தப்ப ட்ட ஆய்வு இதனை தெரிவிக் கிறது.

பெரும்பா லான தாவரங்கள் இனப்பெருக் கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழி தான். இந்த மகரந்த சேர்க்கை என்பது ஒரு பூவிலிருந்து மற்றொரு தாவர பூவிற்கு மகரந்தம் செல்வது எனும்

அயல் மகரந்த சேர்க்கை மற்றும் ஒரு தாவரத் தின் ஒரு பூவிலிரு ந்து அதே தாவரத்தின் மற்றொரு பூவிற்கு மகரந்தம் செல்வது எனும் தான் மகரந்த சேர்க்கை என இரு வகைப்படும். 

இரண்டு வகை மகரந்த சேர்க்கை யும் தானே நடை பெறாது, தாவரத்தி ற்கு மகரந்த சேர்க்கை நடைபெற்று இனப்பெருக் கம் செய்ய துணை தேவை. அரிசி, கோதுமை போன்ற புல் வகை தாவரங் களுக்கு,

அதாவது தானிய விளைச்சல் தரும் தாவரங்களு க்கு காற்று தான் துணை. இவற்றின் பூக்கள் மிக சிறிதாய், கண்களுக்கு புலப்படத அளவில் இருக்கும். மென் காற்று வீசும் போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப் பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.

இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடை பெறும். காற்று தான் இந்த வகை தாவரங்க ளுக்கு துணை. ஆனால் வேறு பல தாவரங்க ளில் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிக ளின் உதவி தேவை.

பொதுவாக தேனீ, வண்டு, பட்டாம் பூச்சி என பல்வேறு வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கை க்கு உதவுகின் றன. பூவின் தேன் குடிக்க வரும் தேனீ அதன் கால்களில் மகரந்த த்தை எடுத்துச் சென்று மற்றொரு பூவில் அமரும்போது அந்த பூவில் மகரந்த த்தை செலுத்து கிறது. 

இவ்வாறு மகரந்த சேர்க்கை க்கு உதவுகிறது. அயல் மகரந்த சேர்க்கை, தான் மகரந்த சேர்க்கை இரண்டிற் கும் பூச்சியினம் இன்றியமை யாதது. பெருமளவு தானிய பயிர்களுக்கு பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு அவசியமில்லை என்றாலும், பல்வேறு காய் கனிகள் பயிர் செய்ய தேனீயின் உதவி அவசியம்.

பூசணி, பரங்கி, வெள்ளரிக் காய் என பல்வேறு காய்கனி தாவரங்கள் விளைச்சல் தர பூச்சிகள் அவசியம். தான் மகரந்த சேர்க்கை ஏற்படும் கத்தரிக் காய் போன்ற தாவரத் திலும், உள்ளபடியே அயல் மகரந்த சேர்க்கை நடைபெற் றால் சூல் கொள்ளுதல் மிகுந்து அதிக பூ காய் தரும்.

எனவே மகசூல் அதிகரிக்கும். வகை தொகை இல்லாமல் பூச்சி மருந்து பயன்படுத்து வதால் மகரந்த சேர்க்கை க்கு உதவும் பூச்சியினம் அழிந்து இந்தியாவில் விளைச்சல் மட்டுபட்டுள்ளது

என பார்த்திபோ போஸ் அவர்களின் ஆய்வு தெரிவி க்கிறது. மேலை நாடுகளில் தேனீ வளர்ப்பு என்பது பரவலாக நடை பெறுகிறது. எனவே இதுகாறும் செயற்கையாக வளர்க்கப்படும்

தேனீக்கள் அருகில் உள்ள வயல் வெளிகளில் மகரந்த சேர்க்கைக்கு உதவி விளைச்சலை பெருக்கி வந்தது. சமீபத்தில் அங்கு பெருமளவு செயற்கை தேனீ கூடுகள் பதிக்கபட்டு தீடீர் என தேனீக்கள் மடிந்தன.

இதன் தொடர்ச்சி யாக அங்கு சமீப ஆண்டுகளில் மகசூல் பெருமளவு பாதிக்கப் பட்டு விளைச்சல் குறைந் துள்ளது. ஐரோப்பா அமெரிக்க முதலிய நாடுகளைப் போல செயற்கை தேனீ வளர்ப்பு இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இல்லை.

எனவே இங்கு இயற்கை தேனீ மற்றும் பூச்சிகள் பயிர் தொழிலுக்கு மிக அவசி யம். ஒவ்வொரு ஆண்டும் பூச்சியின த்தின் நிலை அறிந்து, அந்த ஆண்டு ஏற்படும் காய்கனி விளைச் சலை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராய்வது தான் சால சிறந்ததது.


பூச்சிகள் அருகும் போது விளைச் சல் குறைகிறது. பூச்சிகள் பெருகும் போது விளைச் சல் கூடுகிறதா என அறிய முடியும். ஆனால், இந்தியா வில் பூச்சியினங் களின் நிலை குறித்த ஆய்வு விவரங்கள் இல்லை. எனவே நேரடியான ஆய்வு சாத்தி யமில்லை.

இதன் காரணமாக த்தான், நேரடியான ஆய்வுக்கு பதிலாக மறைமுக ஆய்வு நடத்த திட்ட மிட்டனர். தமது ஆய்வுக்காக பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம், மற்றும் காற்றி னால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரம் இரண்டை யும் எடுத்துக் கொண்டனர். 

நவீன விவசாய முறையில், பூச்சிகொல்லி, வேதி உரம் முதலியன இட்டு பயிர் தொழில் செய்யும் போது, இடு பொருள் கூட கூட காற்றினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் விளைச்சல் உயர்ந்து கொண்டே சென்றது.

மண் தான் செழிப்பை இழப்பது போன்ற காரணங் களினால் விளைச் சல் விகிதம் சற்றே குறைந் தாலும், மொத்த விளைச்சல் கூடியது.

ஏக்கருக்கு பயிர் விளைச்சல் தரும் மகசூல் கூடியது. ஆனால் பூச்சிக ளால் மகரந்த சேர்க்கை ஏற்படும் பயிர்களில் பூச்சிமருந்து வேதி உரம் முதலிய முதலில் விளைச் சலை பெருக்கி னாலும், காலப் போக்கில் விளைச்சல் பெருக வில்லை. 

ஏக்கருக்கு மகசூல் குறைந் தது என்பது புலனாகியது. அதாவது, வேதி பொருள் கொண்டு நடத்தப்படும் விவசாயத் தினால் பூச்சிகள் பாதிக்கப் பட்டு விளைச்சல் மட்டுப் பட்டது என்பது குறிப்பால் விளங்கியது.

விவசாயத் தில் நேரடியாக புலப்படும், நீர், மண், பதிப்பு தரும் பூச்சி தொல்லை முதலிய தவிர கண்களு க்கு புலப்படாத மகரந்த சேர்க்கையும் முக்கிய மானது என இந்த ஆய்வு நமக்கு தெரிவி க்கிறது. 

உலகில் சுமார் 146 நாடுகளின் 90 சதவிகித உணவு தேவையை பூர்த்திசெய்யும் நூறு தாவ ரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க் கை ஏற்படும் தாவரங்கள் ஆகும்.

இதிலிருந்து மகரந்த சேர்க்கை எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள லாம். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7.5 டன் காய்கனி உற்பத்தி யாகிறது. உலக காய்கனி உற்பத்தி யில் இது 14 சதவீதம் ஆகும். 

சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டவது இடத்தில் உள்ள நாடு இந்தியா. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியின ங்கள் அருகினால் இந்திய விவசாயம் பெருமளவு பதிக்க ப்படும் என்பது திண்ணம்.

உணவு உற்பத்தி குறைந்தால் உணவு பாதுகாப்பு மட்டுப்படும் பஞ்சநிலை ஏற் படலாம் என அறிஞர்கள் கவலை தெரிவிக் கின்றனர்.

வேதிப்பொருள் சார்ந்து நடைபெறும் இன்றைய விவசாய முறை நிலைதகு முறையல்ல என கூறும் பர்த்திபோ போஸ், சூழலியல் விவசாய முறைக்கு நாம் மாறவேண்டும் என அறிவுறுத்துகிறார். 

சூழலியல் விவசாய முறை என்பது பண்டைய முறைக்கு செல்வதல்ல என விளக்கும் போஸ், இயற்கை யில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் மிகு நவீன அறிவியலின் பயன்பாடே சூழலியல் விவசாயம் என கூறுகிறார்.

பூச்சி கொல்லி மருந்து பயன் படுத்திட வேண்டு மென்றாலும், எந்த நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை தெளிப்பது என்பதில் தேர்வு வேண்டும். பொதுவாக அதிகாலை யில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது.

எனவே அதிகாலை யில் பூச்சி மருந்தை அடித்தால் ஒரளவு நன்மை பயக்கும் பூச்சிகளை தீங்கிலி ருந்து பாதுகாக்க லாம். சில தாவரங்களின் பூக்கள் நண்பக லில் இதழ் மூடிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை./div>


இந்த தாவரம் பயிரிடப் படுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் இதழ் மூடிய நண்பகலில் பூவை அண்டாது. எனவே இங்கு நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பதே சிறந்தது.

இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலிய அறிந்து அளவோடு பூச்சி மருந்தை பயன் படுத்துவது அறிவுடைமை என்கின் றனர் சூழலியல் வேளாண்மை ஆய்வா ளர்கள்.

உள்ளபடியே இன்று அளவுக்கு அதிகமான பூச்சி மருந்து மற்றும் உர பயன்பாடு விழலுக்கு இறைத்த நீர் போல எதிர்மறை விளைவை தருகிறது. 

தீமை பயக்கும் பூச்சிகளை மட்டுமல்ல நன்மை தரும் பூச்சிகளை யும் கொல் கிறது. உரம் தாவர வளர்ச்சிக்கு உதவுவது தவிர மண்ணில் உள்ள நுண்ணு யிரிகளை பாதித்து மண் செழிப்பை நசிக்கிறது.

கண் மூடித்தன மான பூச்சிகொல்லி மருந்து பயன்பாடு, உர பயன்பாடு முதலிய தவிர்த்து, தாவரமும், நன்மை தரும் பூச்சிகளும் தீங்கு தரும் பூச்சிகளும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று உறவாடு கிறது என்பதை புரிந்து விவசாயம் செய்வதே சூழலியல் விவசாயம்.

இதற்கு நுட்பமான நவீன சூழலியல் அறிவு அவசியம். புதுவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இயக்கி வரும் CERD எனும் ஆய்வு நிறுவனத் தில்

முதலில் இத்தகு சூழலியல் விவசாய ஆய்வு பணிகளை துவங்கி பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சூழலியல் துறையில் விஞ்ஞானி யாக பணிபுரிபவர் முனைவர் பார்த்திபோ போஸ் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இவரது இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் இங்கிலாந் தில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச சூழலியல் கருத்தரங்கு ஒன்றில் சமர்பிக்க பட்டது.
Tags:
Privacy and cookie settings