மீன்கொத்தி பறவையை படம் எடுக்க 6 வருடங்கள் செலவளித்த அலன் மெக்ஃபெடின் !

ஸ்காட்லாந்ததைச் சோ்ந்த புகைப்படக் கலைஞரான அலன் மெக்ஃபெடின் ஒரு மீன்கொத்தி பறவையின் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 6 வருடங்கள் செலவளித்திருக்கிறார். 
இதற்காக 7,20,000 தடவை படங்களை எடுத்திருக்கிறார். தனது தாத்தாவான ரோபோ்ட் முரேதான் தான் புகைப்படக் கலைஞராக வருவதற்குக் காரணம் எனத் தொிவித்துள்ளாா்.

6 வயதிலேயே ஸ்காட்லாந்தின் ஏரிக்கு அருகே அமர்ந்து, மீன்கொத்தி பறவைகளைக் கவனிக்க வைத்த தாத்தா எப்படிப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற நுட்பத்தையும்கற்றுக் கொடுத்ததாகவும் 
6 ஆண்டுகளுக்கு முன்பேயே மீன்கொத்தியின் குறிப்பிட்ட காட்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்காக ஏரிக்கு பக்கத்திலேயே தங்கியிருந்து புகைப்படங்களை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளாா்.

அடிக்கடி ஏரியில் நீர் அதிகரிப்பதால் மீன்கொத்திகளுக்கு ஆபத்து அதிகம் என்பதால் பாதுகாப்பான இடத்தில் ஒரு கூட்டை தானே உருவாக்கியதாகவும் அங்கே மீன்கொத்திகள் குடும்பம் நடத்தி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொரித்ததை படங்கள் எடுத்ததாகவும் தொிவித்துள்ளாா்.
6 ஆண்டுகள் ஒரே இடத்தில் மீன்கொத் திகளையே படங்கள் எடுத்துக் கொண்டி ருந்தாலும் தனக்குச் சலிப்பு வரவில்லை எனவும் குறிப்பிட் டுள்ளாா். 

ஒரு வருடத்தில் 100 நாட்கள் மீன்கொத்தி களுக்காக ஒதுக் கியிருந்ததா கவும் இறுதியில் தனது அந்தக் கனவுக் காட்சி அமைந்தே விட்ட தாகவும் துப்பாக் கியில் இருந்து வெளி வரும் சன்னம் போல,

மீன் கொத்தி தண்ணீரில் அலகைத் தொட்டுக் கொண்டு சில நொடிகள் நின்றதை மிகச் சரியாக கமராவில் பதிய வைத்துக் கொண்ட தாகவும் அது தன் வாழ்க் கையில் அற்புத மான தருணம் எனவும் தனக்கு மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி விட்ட பெருமிதம் ஏற்பட்டு விட்டதாகவும் அலன் தொிவித் துள்ளாா்.
மீன் கொத் தியைப் படம் எடுப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பறவை களின் வாழ்நாள் மிகக் குறை வானது.  ஆனால் இந்த மீன்கொத் தியின் படம் இன்னும் நீண்ட காலம் இந்தப் பூமியில் நிலைத்தி ருக்கும்.

நான் எத்த னையோ படங்கள் எடுத்தி ருந்தாலும் இந்தப் படத்தை விட மிகச் சிறந்த படம் என்னிடம் இல்லை என அலன் தொிவித் துள்ளாா்.
Tags:
Privacy and cookie settings