பெருமாள் ஏரி.. கடலூரில் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் !

கடலூரில் உள்ள பெருமாள் ஏரியிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர், வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள 25 கிராமங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

பெருமாள் ஏரி.. கடலூரில் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் !
வடகிழக்கு பருவ மழையால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்பு குள்ளா யுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை களும் நிரம்பி வழிகின்றன.

தொடர் கன மழையால் கடலூர் அருகே உள்ள பெருமாள் ஏரி முற்றிலும் நிரம்பி விட்டது.

இதனால் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ள தால், கரையோரங் களில் வசிக்கும் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

இதனை யடுத்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகயை அப்பகுதி மக்களே செய்து வருகின்றனர்.

மேலும், இன்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பொது மக்களை மீட்கும் பணியை ராணுவ வீரர்கள் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings