அலி பாபா ( Ali Baba )உருவாக்கும் ஆன் லைன் சைனா பஜார் !

இந்திய சந்தையின் சில்லறை விற்பனையில் நேரடியாக நுழைய முடியாத சீன அலிபாபா நிறுவனம், பேடிஎம் (PayTM) நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் கால்தடம் பதிக்கத் திட்டமிட்டு சுமார் 900 மில்லியன் டாலர், 
 
அதாவது 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது. தற்போது பேடிஎம் நிறுவனம் அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் சைனா பஜார்-யை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 

இந்த ஆன்லைன் சைனா பஜாரில் குறைந்த பட்ச விலையாக 3 ரூபாயில் துவங்கி சுமார் 10 கோடி பொருட்களை அலிபாபா மற்றும் பேடிஎம் இணைந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 

சீன விற்பனையாளர்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்தால் இந்திய மக்களுக்கு லாபம் தான், ஆனால் இந்திய தாயரிப்பு நிறுவனங்களின் நிலை என்னவாகும் ? 

உதாரணமாக 

நீங்கள் ஒரு ஷூ (காலணி) வாங்கத் திட்டமிட்டால், பேடிஎம் நிறுவனம் 500 என்று கொடுத்தால் (சீன தயாரிப்பு) மற்ற நிறுவனங்கள் 900 ரூபாய் என்று இருக்கும் (இந்தியா அல்லது பிற நாட்டு தயாரிப்புகள்).

இந்நிலையில் சாமானியர்கள் 500 ரூபாய் விலை கொண்ட பொருட்களையே வாங்க எண்ணம் வரும். ஆனால் தரத்தில் பல வித்தியாசம் இருப்பதை மக்கள் உணர்வதில்லை. 

இதனால் இந்திய மக்களும் சரி, தயாரிப்பு நிறுவனங்களும் சரி அதிகளவில் பாதிக்கப்பட உள்ளது. பேடிஎம் நிறுவனம், அலிபாபா நிறுவன முதலீட்டுக்கு முன் இந்திய விற்பனையாளர்களைக் கொண்டு தான் அதிகளவிலான இந்திய சந்தையும், வர்த்தகத்தையும் பெற்றது. 

முதலீட்டுக்குப்பின் அலிபாபா நிறுவன தளத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சீன விற்பனையாளர்களை இணைத்துக்கொண்டு இந்திய சந்தையில் தங்களது விற்பனையைத் துவங்கியுள்ளதனால் இந்திய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர். 

இதுபற்றிப் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சீஇஓ விஜய் சேகர் ஷர்மா கூறுகையில், எங்கள் நிறுவன மொபைல் ஆப் தளத்தில் அலிபாபா நிறுவனத்தின் முன்னணி விற்பனையாளர்களை இணைத்துள்ளோம். இதனால் மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் பொருட்களை இந்திய மக்கள் வாங்க முடியும் எனத் தெரிவித்தார். 

இந்த இணைப்பின் மூலம் அலிபாபா வின் முக்கிய விற்பனையாளர்கள் இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தைத் துவங்க ஒரு வாயிலாக அமையும் என விஜய் சேகர் ஷர்மா தெரிவித்தார். இந்த விற்பனையாளர்கள் அலிபாபா நிறுனத்தில் மட்டும் அல்லாமல் Tao Bao, TMall மற்றும் AliExpress ஆகிய நிறுவனங்களிலும் இடம்பெற்றுள்ளனர். 
இதன் மூலம் இந்திய ஆன்லைன் விற்பனை சந்தையில் மிகப்பெரிய விலை போரை பார்க்க முடியும். மக்கள் அதிக லாபத்தை அடைவார்கள் என ஷர்மா தெரிவித்தார். 900 மில்லியன் டாலர் முதலீட்டில், பேடிஎம் நிறுவனம் இதுவரை 2 தவணைகளில் சுமார் 880 மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்துள்ளது அலிபாபா. 

இதற்காகப் பேடிஎம் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை அலிபாபா கைப்பற்றியுள்ளது. இதில் 600 மில்லியன் டாலர் தொகை அடுத்த 3 வருடத்தில் நிறுவன வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் முதலீடு செய்ய உள்ளதாகவும் பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அலிபாபா நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் ஸ்னாப்டீல் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings