சமீபகாலத்தில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து தேவிஸ்ரீபிரசாத் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரயுலகின் முன்னணி இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். சமீபத்தில் விஜய் நடித்த புலி படத்தின் இசையமைப்பாளரும் இவரே. இவர் நடித்தப் படங்களில் சில பாடல் காட்சிகளில் தலைகாட்டிவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், தேவி ஸ்ரீபிரசாத் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை, அவரின் நெருங்கிய நண்பரும், தெலுங்கின் முன்னணி இயக்குநருமான சுகுமார் இயக்க, தில் ராஜூ தயாரிக்கவிருக்கிறார்.
குமாரி 21F, ஆர்யா, ஆர்யா2 உள்ளிட்ட தெலுங்கு படங்களை இயக்கியவர் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி ஸ்ரீபிரசாத் தான் இசை. இப்படத்தில் இரண்டு நாயகிகள் தேவி ஸ்ரீபிரசாத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
ஆனால் ஹீரோயின்கள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. அடுத்த வருடம் ஜனவரியில் படப்பிடிப்புத் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.