ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒருவரும் காதலித்து பிரிந்த நிலையில், அவர்களின் வாழ்க்கை குறித்த ஆவணப் படமொன்று பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எரின், கெத்தி எனும் இந்த அபூர்வ ஜோடி மெட்ரோநியூஸ் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். தற்போது 21 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர்.
தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் 2012 ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.
அதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 19 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.

2012 ஆம் ஆண்டு முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். உலகில் ஆணாகப் பிறந்தவர்கள் பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்தவர்கள் ஆணாக மாறுவதும் தற்போது ஆச்சர்யகரமான விடயமல்ல.
ஆனால், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரும் காதலித்து இணைந்து வாழ்வது அபூர்வம். அமெரிக்காவின் இத்தகைய முதலாவது காதல் ஜோடி, எரின், கெத்தி ஜோடியாகும்.
ஆனால், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரும், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவரும் காதலித்து இணைந்து வாழ்வது அபூர்வம். அமெரிக்காவின் இத்தகைய முதலாவது காதல் ஜோடி, எரின், கெத்தி ஜோடியாகும்.
2013 ஜூன் மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்பின் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்தனர்.
தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என கெத்தி கூறியிருந்தார். துரதிஷ்டவசமாக இவர்களுக்கிடையிலான உறவு முறிந்து விட்டது. ஆனால், புதிய ஆவணப்படத்துக்காக இவர்கள் இணைந்து செவ்வியளித்துள்ளனர்.
நேற்றிரவு ஒளிபரப்பாகவிருந்த இந்த ஆவணப்படத்தில், தமது உறவின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இவர்கள் தெரிவித்துள்ளனர். பாலின மாற்றத்தின் பின் காதலித்த காலத்தில் தமது உடல் மற்றும் உள ரீதியான மாற்றங்கள் குறித்தும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“எமது கதையை அறிந்திருக்காவிட்டால் நாம் பாலின மாற்றம் செய்த ஜோடி என எவரும் கண்டுபிடித்திருப்பார்கள் என நான் எண்ணவில்லை. ஒரு சாதாரண இளைஞனும் யுவதியுமாகவே அவர்கள் எம்மை பார்த்திருப்பார்கள்” என்கிறார் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய யுவதியான கெத்தி.

தான் எப்போதும் காதலிக்க விரும்பியதாக பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய எரின் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலின மாற்றம் செய்துகொண்ட வேறு சிலரும் தமக்கான வாழ்க்கைத் துணையை தேடி வருவதாக இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளனர்.
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய டெவோன் எல்லர்மன் (18) என்பவர், தான் உயிரியில் ரீதியாக பெண்ணாக இருந்தபோதிலும் தன்னை ஆணாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யுவதியொருவரை தன்னால் கண்டறிய முடியும் என நம்புவதாக கூறியுள்ளார்.