சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், இனி கன மழைக்கு வாய்ப்பு இல்லை' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை,
அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை மூலம், சராசரியாக, 44 செ.மீ., மழை கிடைக்கும்.

அக்., 1 முதல், நேற்று வரை வட கிழக்கு பருவ மழை மூலம், தமிழகத்தில் பெய்த மழை குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:ஒரு மடங்கு அதிகம் இந்த கால கட்டத்தில் சராசரியாக, 39 செ.மீ., மழை பெய்யும்.
ஆனால், நடப்பு ஆண்டில், 64 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மிக அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சராசரியை விட, 213 சதவீத மழை அதிகமாக பெய்துள்ளது.
இதற்கு அடுத்து, திருவள்ளூர் - 176; வேலுார் - 133; சென்னை - 128; நெல்லை - 125; விழுப்புரம் - 111; கடலுார் - 102 செ.மீ., மழை, சராசரியை விட கூடுதலாக பதிவாகி உள்ளது.

கோவை, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, சராசரி மழை பெய்துள்ளது.
இன்று முதல் டிச., 13 வரையிலான நான்கு நாட்களுக்கான, வானிலை முன் அறிவிப்பில், இன்று மட்டுமே கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதுவும், தென் மாவட்டங்களில் மட்டும் பெய்யும். டிச., 11, 12, 13ல், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை. சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு வாரமாக, சென்னையில் குறைந்திருந்த வெப்ப நிலை மீண்டும் அதிகரித்து,
அதிகபட்சமாக, 30 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறைந்த பட்ச வெப்பநிலை, 25 டிகிரி செல்சியசாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டில் அதிகம்:
சென்னையில், கடந்த, 10 ஆண்டுகளில், நடப்பு ஆண்டு டிசம்பரில், அதிக மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக டிசம்பரில் சராசரியாக, 19 செ.மீ., மழை சென்னையில் பதிவாகும்.
2005 டிசம்பரில், 42 செ.மீ., மழை பெய்தது. நடப்பு ஆண்டில், 53 செ.மீ., மழை பெய்துள்ளது. இதுவரை, மிக அதிகபட்சமாக, 1946 டிசம்பரில், 69 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.