ஆப்கான் மக்களின் துணிச்சலும், உறுதியும் பாராட்டக்கூடியவை....பிரதமர் மோடி !

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றும் போது, துப்பாக்கி மற்றும் வன்முறைக்கு பதிலடியாக ஜனநாயகப் பாதையை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் மக்களின் துணிச்சலும், 
உறுதியும் பாராட்டத்தக்கவை என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது மோடி இவ்வாறு கூறினார். 

இந்தியாவின் செலவில் ஆப்கன் நாடாளுமன்றக் கட்டடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு பகுதியைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, அந்தப் பிரிவுக்கு வாஜ்பாயின் பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவித்தார். 

120 கோடி இந்தியர்களின் சார்பாக ஆப்கன் வந்திருப்பதாகக் கூறிய மோடி, இரண்டு நாட்டு மக்களின் மனதில் எல்லையற்ற அன்பு நீடிப்பதாகக் கூறினார்.

ஆப்கன் முன்னேற்றத்தில் இந்தியா தொடர்ந்து பங்களித்து வருவதாகக் கூறிய பிரதமர், எல்லை வழியாக பயங்கரவாதம் நுழையாமல் தடுத்தால்தான் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற முடியும் என்றும் வலியுறுத்தினார். 

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உயிர் துறந்த ஆப்கன் ராணுவ வீரர்களில் 500 பேரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை இந்தியா வழங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
Tags:
Privacy and cookie settings